அஷ்ட நரசிம்மர் கோவில் – பகுதி 4

தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்னும் பக்தனின் வாய்மொழிக்கு ஏற்ப தூணில் இருந்து வந்த கடவுள் நரசிம்மர்.   கோபத்துடன் இரணியனை வதம் செய்த நரசிம்மருக்கு எட்டு கோவில்கள் புகழ் வாய்த்தவையாக உள்ளன.  அவற்றில் இன்று நான்காம்  கோவிலைப் பற்றிப் பார்ப்போம்.

சோளிங்கர்

சப்த ரிஷிகளின் வேண்டுகோளின்படி   நரசிம்மர் யோக நிலையில் காட்சியளித்த தலம் இது. மூலவர் யோக நரசிம்மர், உற்சவர் பக்தவச்சலம்  தாயார் அமிர்தவல்லி.

விசுவாமித்திரர் இங்குள்ள நரசிம்மரை வழிபட்டு பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். கடிகாசலம் எனப்படும், 500 அடி உயரமும், 1305 படிக்கட்டுகளும் கொண்ட பெரிய மலையில் மூலவர் அருள்பாலிக்கிறார். உற்சவருக்கு மலையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தள்ளி ஊருக்குள் தனிக்கோவில் உள்ளது.

தமிழ்நாட்டிலேயே மூலவருக்கு தனியாகவும், உற்சவருக்குத் தனியாகவும் கோவில் இருப்பது இங்கு மட்டுமே. பெரிய மலைக்கு அருகில் 406 படிக்கற்களைக் கொண்ட சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம்– சோளிங்கர் சாலையில் இந்த மலைக்கோவில் இருக்கிறது.