அஷ்ட நரசிம்மர் கோவில் – பகுதி 5

தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்னும் பக்தனின் வாய்மொழிக்கு ஏற்ப தூணில் இருந்து வந்த கடவுள் நரசிம்மர்.   கோபத்துடன் இரணியனை வதம் செய்த நரசிம்மருக்கு எட்டு கோவில்கள் புகழ் வாய்த்தவையாக உள்ளன.  அவற்றில் இன்று ஐந்தாம் கோவிலைப் பற்றிப் பார்ப்போம்.

 

சிங்கப்பெருமாள் கோவில்

ஜாபாலி என்னும் மகரிஷி, நரசிம்மரை வேண்டி தவம் செய்து, அவரது தரிசனம் பெற்ற தலம் இது. இவர் ‘பாடலாத்ரி நரசிம்மர்’ என்று அழைக்கப்படுகிறார்.  அபூர்வ நெற்றிக்கண்ணுடன் மலைமீது அமர்ந்திருப்பதால், இந்த பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில், அவர் இடது காலை மடித்துவைத்தும், வலது காலை தொங்கவிட்ட நிலையிலும் காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில் வலது காலை மடித்து வைத்தும், இடது காலை தொங்கவிட்ட நிலையில் மிகப்பெரிய மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார்.

காஞ்சீபுரம் மாவட்ட எல்லைக்குள், தாம்பரம் – செங்கல்பட்டு இடையில் சிங்கப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.