சென்னை:

மிழகத்தில் கடந்த 3  ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில் இன்று உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அறிவித்து உள்ளார். நிர்வாக காரணங்களுக்காக முதற் கட்டமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே மட்டுமே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிக்கப்படும் என கூறி உள்ளார்.

அதன்படி தேர்தல் டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும் நிலையில், உள்ளாட்சித் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் ஜனவரி 11ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஊராக உள்ளாட்சி அமைப்பு பதவிகளான, ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு, வருகிற 6ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது.

வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய இம்மாதம் 13ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 16ஆம் தேதியும், அவற்றை திரும்ப பெறுவதற்கான இறுதி நாள் 18ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊராக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு, வருகிற 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 30ஆம் தேதியும் நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை ஜனவரி மாதம் 2ஆம் தேதி நடைபெறும் என்றும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள்  6ஆம் தேதி பதவியேற்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் ஆகியோர், ஜனவரி 11ஆம் தேதி நடைபெறும் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும்  கூறியுள்ளது.

ஊராக உள்ளாட்சி அமைப்பு பதவிகளான, ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவின்போது, வெள்ளை, இளஞ்சிவப்பு, பச்சை, மஞ்சள் ஆகிய நான்கு வண்ணங்களில், வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படும் என்றும அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தகவல் மையத்துடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும்,  முதற்கட்ட தேர்தலில் 1 கோடியே 64 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டிசம்பர் 27ம் தேதி முதற்கட்டமாக 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3232 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 6251 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு, 49638 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடைபெறும்.

ஊராட்சி பதவிகளுக்கு 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டு உபயோகப்படுத்தபட உள்ளதாகவும், தேர்தல் பணிகளில் 870 தேர்தல் அலுவலர்களும், 16,840 தேர்தல் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.

2ம் கட்ட தேர்தலில் 1 கோடியே 67 லட்சம் பேரும் வாக்களிக்க உள்ளனர் என்று தெரிவித்துள்ளதுடன்,  அங்கீகரிக்கப் படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு சின்னங்கள் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3239 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 6237 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு, 49686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடைபெறும்.

நேரடி தேர்தல் உள்ளாட்சி அமைப்புகளில் 1 லட்சத்து 18 ஆயிரத்து தொள்ளாயிரத்து 74 பதவிகளை நிரப்பிட நேரடி தேர்தல் நடைபெறும். இதில் 31 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 658 வார்டு  உறுப்பினர் பதவிகளுக்கும், 388 ஊராட்சிக்கு உட்பட்ட 6886 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் நேரடி தேர்தல் நடைபெறும். வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடைபெறும்.

தேர்தலில் போட்டியிடுபவர்கள் தேர்தல் வைப்புத்தொகை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, கிராம வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு ரூ.200ம், கிராம ஊராட்சித் தலைவர் தேர்தலுக்கு ரூ.600ம், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு ரூ.600ம், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு ரூ.1000ம் வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தலில் போட்டியிடும் ஆதிதிராவிடர்களுக்கு சலுகை வழங்கப்பட்டு உள்ளது.

தேர்தல்செலவினமான அதிகபட்சமாக கிராம வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ரூ.9 ஆயிரமும், ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள்  ரூ.34 ஆயிரமும்,  ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ரூ.85ஆயிரமும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ரூ.1லட்சத்து 70ஆயிரமும் செல்வு செய்யலாம் என கூறப்பட்டு உள்ளது.

மேலும்,  தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் செலவு கணக்கை ஒப்படைக்காவிட்டால் 3 ஆண்டுகள் போட்டியிட முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.