அறிவோம் தாவரங்களை – ஏலம்(க்)காய்

ஏலம்(க்)காய்.(Elettaria Cardomum)

ஸ்காண்டினேவியா உன் தாயகம்!

கி.மு. 1300 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய செடித்தாவரம்!

13 அடி வரை உயரம் வளரும் குச்சிச்செடி!

அமெரிக்காவின் ‘கோட் மாலா’ நகரில் அதிகமாக விளையும் வாசனைத் தாவரம்!

இஞ்சிச்செடியின் தம்பிச்செடி!

பச்சை ஏலக்காய்!கருப்பு ஏலக்காய் என இரு வகையாய் விளையும் இனியக் காய்!

இந்திய உணவுப்பொருளின் மசாலா ராணி!

சமையல்கட்டில் வாசனைக் காய்!

உணவுப் பொருள்களின் நறுமணப்பொருள்!

தேநீருக்கு மணம் சேர்க்கும் பச்சைச் சிறுகாய்!

கேரள நாட்டில் நிறைய விளையும் பூக்கும் தாவரம்!

குவாத்தமாலா, தன்சானியா, இலங்கை என எங்கும் விளையும் வைரச்செடி!

குங்குமப் பூவிற்கு அடுத்ததாக  விலையுயர்ந்த தங்கக்காய்!

இனிப்புப் பண்டங்கள், கார வகைத்  தீனிப்பொருள்கள், கீர் உணவுகள்,பிரியாணி சாப்பாடுகளில்  மணமும் சுவையும்   கூட்டும் நறுமணக்காய்!

மணமும் மருத்துவக் குணமும் கொண்ட மகத்துவமே! நீ

தவமும் கல்வியும் உள்ளவரை தரணியில் சிறப்பாய் வாழியவே!

நன்றி : பேரா.முனைவர், ச.தியாகராஜன்(VST)

நெய்வேலி.

☎️9443405050.