அறிவோம் தாவரங்களை தைலமரம்

--

அறிவோம் தாவரங்களை தைலமரம்

தைலமரம் (Eucalyptus)

ஆஸ்திரேலியா,டாஸ்மானியா  உன் தாயகம்!

50 மீ.வரை உயரம் வளரும் அழகுமரம் நீ!

ஐரோப்பா, ஆப்பிரிக்கா,  இந்தியா நாடுகளில் அதிகம் வளரும் அற்புத மரம் நீ!

தைலம் கொடுக்கும் தங்கமரம் நீ!

700 வகைகளில் எங்கும் வளரும் இனிய மரம் நீ!

1843ஆம்  ஆண்டு ஆங்கிலேயர்களுடன் பாரதம் வந்தடைந்த பயன்மரம் நீ!

நீலகிரியின் மலையின் ராணி மரம் நீ!

சளி, இருமல், கழுத்து வலி, இடுப்பு வலி, சுளுக்கு, தசைப்பிடிப்பு, தலைவலி, வாதம், மூக்கடைப்பு, காயம், காய்ச்சல், உடல் வெப்பம், தசைவலி, ஆகியவற்றுக்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

பூச்சிக்கொல்லி மருந்து, மரக்கூழ்,பற்பசை தயாரிக்கப் பயன்படும் புனித மரம் நீ!

ஸ்பெயின் நாட்டுப் பல்கலையின் ஆய்வுப்படி எரிச்சலைப் போக்கும் இனிய எண்ணெய் மரம் நீ!

௧௦ ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும் தைலம் தரும் மூலிகை மரமே!

நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் நெட்டை மரமே!

ஆவிபிடிக்க இலை கொடுக்கும் அற்புத மரமே!

எரிபொருளாகப் பயன்படும் இனிய மரமே!

வறண்ட சமவெளிகளில் வளரும் வலிமை மரமே!

பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படும் நயன் மரமே!

மனச்சோர்வுக்கு ஏற்ற மருந்து மரமே!

நீவிர் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

முதல்வர்

ஏரிஸ் கலைக் கல்லூரி,

வடலூர்.📱9443405050