அறிவோம் தாவரங்களை – இச்சி மரம்

இச்சி மரம்.(Ficus tsiela)

குறிஞ்சி நிலத்தில் அதிகமாய் வளரும் குறுமரம் நீ!

இத்தி மரம் ,கல் இத்தி மரம், குருக்கத்தி மரம் எனப் பல்வேறு பெயர்களில் பரிணமிக்கும் பசுமை மரம் நீ!.

50 அடி வரை உயரம் வளரும்   அழகுமரம் நீ!

குடகுமலை காபி செடிகளுக்கு நிழல் கொடுக்கும் கொடை மரம் நீ!

மலச்சிக்கல் வயிற்றுப் புண்,வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, பித்தம், கபம், ரத்தப் போக்கு, உடல் சூடு, காய்ச்சல், வாய்த் துர்நாற்றம்,தொண்டைப்புண், தலை சுற்றல், மயக்கம்,  சுவாசப் பிடிப்பு, பசியின்மை ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

ஊஞ்சல் கட்டி ஆட உகந்த மரமே!

வேர், பட்டை ,காய் ,கனிகள் என எல்லாம் பயன்படும் நல்வகை மரமே!

பறவைகளுக்கும் கால்நடைகளுக்கும் கனிகள் கொடுக்கும் கவின் மரமே!

ஆலமர இலை வடிவ இலை மரமே !

கொத்துக்கொத்தாய் கனி கொடுக்கும் முத்து மரமே!

குடை போல் விரிந்து தோன்றும் கிளை மரமே !

கிள்ளிய இடமெல்லாம் பால் வடியும் பசுமை மரமே !

விழுதுகளைக் கொண்ட நிழல் மரமே!புண்ணிய விருட்சமே !

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க !உயர்க !

நன்றி : பேரா.முனைவர்.  ச.தியாகராஜன்

நெய்வேலி.

☎️9443405050.