உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் : குரூப் எச் விவரங்கள்

மாஸ்கோ

லகக் கோப்பை கால்பந்து போட்டி 2018ல் விளையாடமப் போகும் குரூப் எச் பிரிவில் உள்ள நாடுகள் குறித்த விவரங்கள் இதோ

ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018 கள் தொடங்க இன்னும் ஒரு சில தினங்களே உள்ளன.    இந்தப் போட்டிகளில் மொத்தம் எட்டு பிரிவுகளில் 32 நாட்டு அணிகள் விளையாட உள்ளன.     ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி எச் என பிரிக்கப்பட்ட இந்த பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் 4 நாட்டு அணிகள் இடம் பெற்றுள்ளன.    நாம் இந்த செய்தியில் எச் பிரிவில் உள்ள நாடுகளைப் பற்றி பார்ப்போம்.

குரூப் எச்:

போலந்து

ராபர்ட் லியுவாண்டொவ்ஸ்கி

போலந்து அணிக்கு கடந்த 2006 ஆம் ஆண்டுக்குப் பின் விளையாட வாய்ப்புக் கிடைத்துள்ளது.  இந்த அணியின் வீரர்களான ராபர்ட் லியுவண்டொவ்ஸ்கி மற்றும் ஜேகப் ஆகியோருக்கு அநேகமாக இதுவே கடைசி போட்டிகளாக இருக்கலாம்.   கடந்த 2016 யூரோ போட்டிகளில் கால் இறுதியை போலந்து எட்டி உள்ளது.

போலந்து அணியின் முக்கிய வீரர் ராபர்ட் லியுவாண்டொவ்ஸ்கி ஏற்கனவே உலகின் சிறந்த கோல் கீப்பர்களில் ஒருவர் ஆவார்.

இந்த அணியின் பயிற்சியாளர் ஆடம் நவால்கா தனது திறமையான பயிற்சியின் மூலம் தகுதிச் சுற்று ஆட்டங்களில் போலந்தை ரசிகர்கள் மனதில் இடம் பெறச் செய்துள்ளார்.

செனகல்

சாடியோ மான்

செனகல் அணி முதன் முதலில் 2002 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் கலந்துக் கொண்டது.  தற்போது மீண்டும் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றுள்ளது.   அந்தப் போட்டியில் கால் இறுதி வரை முன்னேறிய ஆப்ரிக்க அணிகளில் இதுவும் ஒன்றாக இருந்தது.

இந்த அணியின் முக்கிய வீரரான சாடியோ மான் ஒரு திறமை மிக்க வீரர் ஆவார்.

இந்த அணியின் பயிற்சியாளர் அலியொ சிசே ஏற்கனவே கடந்த 2002ல் வெற்றி பெறாமல் விட்ட உலகக் கோப்பையை இம்முறை செனகலுக்கு வாங்கித் தருவேன் என சவால் விட்டுள்ளார்.

கொலம்பியா

ஜேம்ஸ் ராடிரிக்யூஸ்

கொலம்பியா கடந்த போட்டியில் கால் இறுதி வரை வந்து பிரேசிலிடம் தோல்வி அடைந்தது.    இந்த முறை தகுதிச் சுற்று பந்தயங்களில் கொலம்பிய அணி சற்றே தடுமாறியது.   தகுதிச் சுற்றின் கடைசிப் போட்டியில் வெற்றி பெற்று கடைசியாக போட்டியில் சேர்ந்த கொலம்பியா அணி குறித்து போட்டி ஆரம்பித்த பிறகுதான் எதுவும் கூற முடியும்.

இந்த அணியின் முக்கிய வீரரான ஜேம்ஸ் ராடிரிக்யூஸ் கடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்த அணியை கால் இறுதி வரை கொண்டு சென்றவர் ஆவார்

இந்த அணியின் பயிற்சியாளர் ஜோஸ் பேகர்மென் கொலம்பியா அணியை உலகக் கோப்பை போட்டியில் இடம் பெற பெரும் பாடு படவர் ஆவார்.

ஜப்பான்

 

ஷிஞ்சி ககவா

ரசிகர்களின் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புடன் களம் இறங்கும் இன்னொரு அணி ஜப்பான் ஆகும்.  இந்த அணியில் பல திறமையான வீரர்களும் அனுபவம் மிக்க கோல் கீப்பர்களும் நிறைந்துள்ளனர்.   பல ஐரோப்பிய போட்டிகளில் கலந்துக் கொண்ட அனுபவம் இந்த அணிக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் ஆகும்

இந்த அணியின் முக்கிய வீரரான ஷிஞ்சி ககவா இது வரை 89 கோல்கள் அடித்துள்ளார். அத்துடன் இவருக்கு உதவ பல நட்சத்திர வீரர்கள் அணியில் உள்ளனர்.

இந்த அணியின் பயிற்சியாளர் வாகித் ஹலில்ஹோட்சிக்.  கடந்த 2014 ஆம் வருடம் அல்ஜீரியாவுடன் பெற்ற வெற்றியை 65 வயதாகும் இவர் மீண்டும் பெற்றுத் தருவார் என ரசிகர்கள் நம்புகின்றனர்.