அறிவோம் தாவரங்களை – பெருஞ் சீரகம்

பெருஞ் சீரகம்.(Foeniculum Vulgare)

மத்தியதரைக்கடல்,தென் மேற்கு ஆசியா உன் பிறப்பிடம் !

4 அடி வரை உயரம்   வளரும் ஓராண்டுத்  தாவரம்!

செழுமைப்  பூமியில்  வளரும் அருமை   மூலிகை!

வாசம், சுவை  மிகுந்த  வயல் வாழ்த் தாவரம்!

பானங்கள்,  மிட்டாய்களின் பயன்பாட்டுச்  சுவைப்போருள் நீ!

மணமிகு எண்ணெய் தரும் மருத்துவச் செடி நீ!

கண் பார்வையை அதிகரிப்பாய்!

உயர் ரத்த அழுத்தத்தைச் சமநிலைப் படுத்துவாய்!

சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்தும் பெருஞ்சீரகம்!

தாய்ப்பாலை அதிகரிக்கும் மேல்நாட்டுத்   தாவரம்!

வயிறு உப்புசம்,  வாயுத் தொல்லைக்கு வாய்த்த நல்மருந்து!

சுவாசப் பையைச் சுத்தப்படுத்தும் வாசச்செடி!

வாய் துர்நாற்றத்திற்கு வாய்த்த நல் சூரணம்!

சர்க்கரை நோய்க்கும் சரியான மருந்து!

கல்லீரல் தன்னைக் காக்கும் காவலன்!

மாதவிடாய், மலட்டுத்தன்மை, தூக்கமின்மைக்கு  ஏற்ற மருந்து!

பிடிப்புகளை உடைக்கும் சுவைமிகு தேநீர்!

அகத்தியர் ‘குணபாடம்’ நூல் அருமையாய் உரைக்கும்  குழந்தைகளுக்கு  உகந்த கஷாயம் கொடுக்கும் அழகுச்செடியே!

உணவு விடுதியின் காசாளர் மேசையின் வாசனைப பொடியே!

அன்னாசிப் பூவின் சுவையை கொடுக்கும் மஞ்சள் பூவே!

விண்ணாளும் இறைவன் அருளால்  நீவிர் பல்லாண்டு காலம் வாழ்க!வளர்க!உயர்க!

நன்றி :  பேரா.முனைவர் ச.தியாகராஜன்(VST)

நெய்வேலி.

📱9443405050.