அறிவோம் தாவரங்களை – காந்தள் கொடி.

அறிவோம் தாவரங்களை – காந்தள் கொடி.

காந்தள் கொடி (Gloriosa superba)

ஆப்பிரிக்கா, ஆசியா உன் தாயகம்!

வேலிகளில், பாதை ஓரங்களில் படர்ந்து கிடக்கும் பசுமைக் கொடி நீ!

தமிழ்நாட்டில் மாநில மலர் நீ!

ஜிம்பாவே, தமிழீழம் நாடுகளின் தேசிய மலர் நீ!

இந்தியா, ஆசியா, மலேசியா, சீனா, மலாக்கா நாடுகளில் பூத்துக் கிடக்கும் புனித மலர் கொடி நீ!

நஞ்சுத் தன்மை கொண்ட வேர் கொடி நீ!

அரிப்புத் தன்மை கொண்ட தண்டு இலை கொடி நீ!

20 அடிவரை உயரம் வளரும் படர்கொடி நீ!

கார்த்திகைக் கிழங்கு, வெண்தோன்றி கிழங்கு, கலப்பைக்கிழங்கு எனப் பல்வகைப் பெயர்களில் அழைக்கப்படும் கிழங்கு கொடி நீ!

அக்னிசலம், இளாங்கிலி,தலைச்சுருளி, பற்றி, கோடல், தோன்றி,வெண் தோண்டி,வெண்காந்தள், செங்காந்தள் எனப் பல்வேறு பெயர்களில் பரிணமிக்கும் ஒரு பொருள் குறித்த பல சொல் கிளவி நீ!

பாம்புக் கடி, தேள் கடி, வண்டுகடி, எலி, பூரான் கடி,பிரசவ நஞ்சுக்கொடி இறங்க, வாதநோய், மூட்டுவலி, தொழு நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

ஏழு நாள் வரை வாடாமல் இருக்கும் இனிய பூங்கொடியே!

அகல் விளக்கு போன்ற ஆறு இதழ்களைக் கொண்ட அற்புதப் பூங்கொடியே!

கிழங்குகள், விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் இனிய கொடியே!

கிழங்கு ஏற்றுமதி செய்யப்படும் பணப்பயிரே!

ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தில் பயன்படும் மருந்து கொடியே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

நெய்வேலி. 📱9443405050.