தொற்று நோய்களும் தெய்வங்களும் – ஒரு பார்வை : பகுதி 1

இந்தியாவில் தொற்று நோய் பரவும் போது அதைச் சமாளிக்க நிபுணர்கள் மட்டுமின்றி தெய்வங்களும் பல நூற்றாண்டுகளாக உதவி வருகின்றனர்.

இந்தியாவை பொறுத்த வரை கொரோனா போன்ற எவ்வித கொடிய நோய்கள் தாக்கும் போது இங்குள்ள இந்து மக்களுக்கு உதவ ஒரு கை தயாராக உள்ளது.  அந்தக் கை பல ஆயுதங்களை ஏந்தி மக்களைக் காக்க தீயவைகளை கொல்லவும் செய்கிறது.  இந்த தெய்வங்கள் பொதுவாக அம்மன் என அழைக்கப்படுகிறது.   அதாவது மக்களைக் காக்கும் ஒரு தெய்வீக தாய் என உணரப்படுகிறது.

இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புறங்கள் மற்றும் நகர எல்லைகளில் இந்த தெய்வங்களில் ஆலயங்களை நாம் காண முடியும்.    இங்குள்ள மக்களைப் பொறுத்தவரையில் அம்மன் என்பவள் அனைத்து நோயையும் குணப்படுத்தும் வல்லமை கொண்ட நிபுணராக இருக்கிறாள்.  அவளுக்குக் கோபம் வந்தால் அவளே பல கொள்ளை நோய்களை ஏற்படுத்துபவளாகவும் இருக்கிறாள் என்பதும் இங்கு நம்பப்படுகிரது.

உலகெங்கும் பிளேக் நோய் பரவியபோது ஹரிதி என்னும் ஒரு அரக்கன் மூலம் பரவியதாகப் பல நாடுகளில் நம்பப்பட்டு அதை அழிக்க ஒரு தெய்வம் வந்ததாகக் கூறப்பட்டு வந்தது.   இந்த நோய் இந்தியாவுக்கும் வந்தது.   கடந்த 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பெங்களூரு நகரில் ஏற்பட்ட புபோன்க் பிளேக் தொற்று நோய் இந்த வகையாகும்.  இதைக் குணப்படுத்த பிளேக் அம்மா என்னும் தெய்வம் உதவி புரிந்ததாக இன்றும் கொண்டாடப்படுகிறது.

இதன் ஆரம்பம் அம்மை நோயைக் குணப்படுத்தும் மாரி அம்மன் ஆகும்.   மாரி என்பது மழை மற்றும் மாற்றம் ஆகிய இரண்டாகவும் பொருள் கொள்ள முடியும்.  இந்த தாய் வட இந்தியாவில் ஷீதல் மாதா என அழைக்கப்படுகிறார்.   ஷீதல் என்பதற்குக் குளிர் அதாவது அம்மையின் வெப்பத்தை குளிர்விப்பவள் எனப்  பொருளாகும்.

இத்தகைய தெய்வங்கள் மற்றும் அவற்றின் சின்னங்கள் மூலம் நோயைக் குணப்படுத்தும் சிகிச்சை முறை தெரிய வருகிறது.  குறிப்பாக ஷீதல் மாதா (மாரியம்மன்) வழிபாட்டில் குளிர்ந்த பானை நீர், அழுக்கு மற்றும் குப்பைகளை அகற்றும் துடைப்பம், வேப்ப இலைகள் ஆகியவை முக்கிய இடங்களைப் பெறுகின்றன.   இவை அனைத்தும் அம்மை நோயைக் குணப்படுத்த முக்கிய பங்கு வகிப்பவை ஆகும்.

அதே வேளையில் இது போன்ற தெய்வங்கள் மென்மையானவர்களாக இருப்பதில்லை.  அவர்களில் பலர் மனிதர்களை பராமரித்தாலும் உள்ளூர வெப்பத்தை வெளிப்படுத்தும் வனதேவதைகளாகவே உள்ளனர்.   பெரும்பாலும் இந்த கோவில்களில் கீழ் சாதி எனக் கூறப்படுவோர், தலித்துகள், உள்ளிட்டோர் பூஜை செய்பவர்களாக உள்ளனர்.  இவற்றில் சிலர் இத்தகைய தெய்வங்களைச் சூனியம் மற்றும் மந்திர தந்திரங்களுக்கும் பயன்படுத்துகின்றனர்.

(விரைவில் 2 ஆம் பகுதியில் சந்திப்போம்)