ஹூஸ்டன்

ஹூஸ்டன் நகரில் ஹவ்டி மோடி நிகழ்வின் போது மோடி மற்றும் டிரம்புடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட 13 வயது சிறுவன் குறித்த தகவல் பலராலும் பரப்பப்பட்டுள்ளது.

 

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரிஒல்ல் ஹவ்டி மோடி என்னும் நிகழ்வில் பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வு அமெரிக்க வாழ் இந்தியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராவதற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இண்டஹ் நிகழ்வில் மூலம் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவின் ஆதரவை இந்தியா பெற்றுள்ளதாகப் பலரும் கூறி வருகின்றனர்.

இந்த நிகழ்வின் அங்குள்ள இந்தியர்கள் பல நிகழ்வுகளை நிகழ்த்தினர். அந்த கலைஞர்கள் வரிசையாக நின்று மோடிக்கும் டிரம்புக்கும் வரவேற்பு அளித்தனர். அப்போது அந்த வரிசையில் கடைசியாக நின்றிருந்த ஒரு 13 வயது சிறுவன் மோடி மற்றும் டிரம்புடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளக் கோரிக்கை விடுத்தான். அவன் அருகில் நின்றிருந்த நடனப் பெண்கள் அதனால் ஆச்சரியம் அடைந்தனர். ஆனால் மோடி மற்றும் டிரம்ப் இருவரும சிறுவனின் விருப்பத்துக்கிணங்க செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

 

இந்த தகவல் பல சமூக வலை தளங்களில் படம் மற்றும் வீடியோவுடன் பதிவாகி வைரலாகி வருகிறது. அந்த சிறுவனின் பெயர் சால்விக் ஹெக்டே ஆகும். அவர் ஹவ்டி மோடி நிகழ்வில் யோகா பயிற்சிகளைச் செய்த குழுவில் உள்ளவர் ஆவார். உத்தர கர்நாடகாவைச் சேர்ந்த பிரபாகர் மற்றும் மேதா ஆகியோரின் மகன் சால்விக் ஆவார், இவர்கள் 17 வருடங்களாக டெக்ஸாஸ் மாநிலத்தில் வசித்து வருகின்றனர். பிரபாகர் ஒரு தனியார் நிறுவன ஊழியராகவும் மேதா ஒரு பள்ளி ஆசிரியையாகவும் பணி புரிந்து வருகின்றனர்.