குடியரசு தினம் : இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய வழக்கறிஞர்கள்

டில்லி

ந்திய குடியரசு தினத்தன்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க உதவிய வழக்கறிஞர்களை நினைவு கோருவோம்.

இந்தியா சுதந்திரம் அடைய பாடுபட்ட மக்களில் ஏராளமான வழக்கறிஞர்கள் உள்ளனர். அவ்வாறு பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை குடியரசாக்க அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. இதை உருவாக்க ஒரு வழக்கறிஞர் குழு உதவி உள்ளது. அந்த குழுவில் இருந்த வழக்கறிஞர்களை  நாம் இந்த குடியரசு தினத்தன்று நினைவு கோருவோம்.

1. பி ஆர் அம்பேத்கர் : இவர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வடிவமைப்பாளர் ஆவார். இவரை அனைவருக்கும் தெரியும் என்பதால் இவரைப் பற்றிய விவரங்கள் தேவைப்படாது. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான அம்பேத்கர் மும்பை சட்டக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றியவர் ஆவார்.

2. அல்லாடி கிருஷ்ண ஐயர் : இவர் சரித்திர பட்டப்படிப்பு படிக்கும் போதே பகுதி நேரத்தில் சட்டம் படித்தவர் ஆவார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 1929 முதல் 1944 வரை அட்வகேட் ஜெனரலாக பணி புரிந்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய எட்டு பேர் கொண்ட குழுவில் இவரும் இடம் பெற்றவர் ஆவார்.

3. கே எம் முன்ஷி : இவர் சட்டப்படிப்பில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற பிறகு கடந்த 1907 ஆம் வருடம் முதல் மும்பையில் வழக்கறிஞராக தொழில் நடத்தி வந்தார். பாரதிய வித்யா பவன் என்னும் கல்வி நிலையத்தை முன்ஷி உருவாக்கி உள்ளார். 1952 -57 வரை உத்திரப் பிரதேச அளுநராக பணி புரிந்தார். சுதந்திர போராட்டத்தில் கலந்துக் கொள்ள தனது வக்கீல் தொழிலை விட்டு விலகியவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

4. கோவிந்த் பல்லப் பந்த் : அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பயின்ற இவர் உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதல் முதல்வர் ஆவார். 1955-61 வரை மத்திய அமைச்சரவையில் பணி புரிந்துள்ளார். இவர் அரசியலமைப்பு சட்டத்தில் இந்துப் பெண்கள் விவாகரத்து கோரும் உரிமையை சேர்க்க வலியுறுத்தியவர் ஆவார்.

5. தெபி பிரசாத் கைத்தான் : இந்தியாவின் தற்போது பிரபலமான சட்ட நிறுவனமக உள்ள கைத்தான் நிறுவனத்தை இவர் தனது சகோதரர்களுடன் சேர்த்து உருவாக்கியவர் ஆவார். இந்த சட்ட நிறுவனம் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே செயல்பட்டு வரும் இந்தியாவின் முன்னணி சட்ட நிறுவனம் ஆகும்.

6. சர் சையத் முகமது சாதுல்லா : இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருந்து இந்தக் குழ்வின் இடம் பெற்ற ஒரே வழக்கறிஞர் ஆவார். இவர் கௌகாத்தி மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்தி உள்ளார். சுதந்திரத்துக்கு முன்பு அசாம் பகுதியின் பிரதமராக பணி ஆற்றி உள்ளார்.

7. கோபால்சாமி ஐயங்கார் : இவர் சட்டம் படித்த பிறகு வழக்கறிஞர் தொழிலை செய்யாமல் அரசு அதிகாரியாக பதவி ஏற்றவர் ஆவார். 3 வருடங்கள் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்துள்ளார். 1937-43 ஆம் வருடம் ஜம்மு காஷ்மீர் பிரதமராக பதவி வகித்துள்ளார்.

8. பி எல் மிட்டர் : பரோடா சமஸ்தானத்தின் திவானான மிட்டர் மேற்கு வங்க ஆளுநராகவும் மத்திய சட்ட அமைச்சகத்திலும் பணி புரிந்துள்ளார். சுதந்திர இந்தியாவில் பல சிற்றரசுகளை இணைப்பதில் இவருடைய பங்கு மிகவும் குறிப்பிடத்தகக்கது.