வருமான வரி கணக்கு தாமதமாக அளித்தால் என்ன ஆகும் தெரியுமா?

டில்லி

ருமான வரி கணக்கு அளிப்பது குறித்தும் தாமதமாக அளிப்பதால் என்ன ஆகும் என்பது குறித்தும் வருமான வரி விதிகள் தெரிவிப்பதை பற்றி இப்போது அறிவோம்.

வருமான வரிக்கணக்கை தொடர்ந்து அளிப்பவர்களுக்கு அனைத்து விதிமுறைகளும் தெரிந்திருக்கும்.   ஆனால் சமீபத்தில் கணக்கு அளிக்க ஆரம்பித்தவர்களுக்கு அனைத்தும் புதுமையாக இருக்கும்.   அவர்கள் இந்த செய்தியின் மூலம் இந்த விதிகள் பற்றி அறிந்துக் கொள்ள முடியும்.   இந்த வருடத்துக்கான வருமான வரிக்கணக்கை வரும் 31 ஆம் தேதிக்குள் (31/07/2018) க்குள் அளிக்க வேண்டும்.

அதாவது 2017-18க்கான கணக்கு வருடத்துக்கான வருமான வரிக் கணக்கு வரி வருடம் 2018-19 என கூறப்படுகிறது.   வரி வருடத்தின் முதல் மூன்று மாதங்கள் முடியும் முன்பு கணக்கு அளிக்க வேண்டும் என்பது வருமான வரியின் விதிகளில் ஒன்றாகும்.  வருமான வரிக்கணக்கு யார் யார் அளிக்க வேண்டும் என்பதை முதலில் பார்ப்போம்.

இந்தியாவில் வசிக்கும் 60 வயது வரை உள்ளவர்களுக்கு வருட வருமானம் ரூ.250000 அல்லது அதற்கு மேல் இருந்தால், மற்றும்  60 வயதுக்கு மேலும் 80 வயதுக்குள்ளும் உள்ளோர் ரூ.300000 க்கு மேல் வருட வருமானம் ரூ. 3 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டால் வருமான வரி கணக்கு அளிக்க வேண்டும்.   80 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த வரம்பு ரூ. 5 லட்சம் ஆகும்.

பொதுவாக பல நேரங்களில் வருமான வரி பிடித்தம் செய்தே தொகைகள் வழங்கப்படுகின்றன.   அதன்படி குறைந்த பட்ச வருமானத்துக்கு கிழ் உள்ளவரக்ளுக்கும் வரி பிடிக்கப்படுகிறது.   இந்த வருமான வரி கணக்கை அளிப்பதன் மூலம் இவ்வாறு பிடிக்கப்பட்ட வருமான வரியை அதற்கான வட்டியுடன் மீண்டும் பெற முடியும்.

அதே போல் செலுத்திய வருமான வரிக்கான வருமானத்தை விட அதிகம் இருந்தால் கணக்கு செலுத்தும் போதே அந்த மீதி வரியை செலுத்தி விடலாம்.

வருமான வரி கணக்கு அளிக்கப்பட வேண்டிய கடைசி தேதிக்குப் பிறகு கணக்கு அளித்தால் என்ன ஆகும் என்பதையும் விதிகள் தெரிவித்துள்ளன.   ஜூலை 31க்குப் பிறகு கணக்கு அளிப்பவர்கள் செலுத்த வேண்டிய வரிக்கு மாதம் 1% வரை அபராதத்துடன் வரியை செலுத்த வேண்டி வரும்.   அதாவது நீங்கள் செலுத்த வேண்டிய வரி ரூ.20000 என வைத்துக் கொண்டால் ஜூலை 31 க்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.200 அபராதம் செலுத்த வேண்டி வரும்.  அதுவே வருடக் கணக்கில் தாமதம் செய்யப்பட்டால் வழக்கை சந்திக்க நேரிடும்

கார்ட்டூன் கேலரி