அறிவோம் தாவரங்களை – ஆடாதொடை

ஆடாதொடை.  (Justicia adhatoda)

 பாரதம் உன் தாயகம்!புதர்போல் வளர்ந்திருக்கும் கொத்துச்செடி நீ!

இமயமலை, தென்னிந்தியா,  இலங்கை பகுதிகளில்  அதிகமாய்க் காணப்படும் அழகு செடி நீ!

உன் இலைகளை   ஆடுகள் தின்னா.எனவே நீ ஆடுதொடா இலை ஆனாய்!

ஆடு தின்னா பாளை,   பங்கம்பாளை என இருவேறு  பெயர்களில் விளங்கும் இனிய செடி நீ!

15 அடிவரை உயரம் வளரும் பசுமைச்செடி நீ!    கோழையகற்றி,நுண்புழுக் கொல்லி,  சிறுநீர் பெருக்கி, வலி நீக்கி எனப் பல்வேறு பெயர்களில் விளங்கும் பசுமைச் செடி நீ!

சளி,இருமல்,  தொண்டைக் கட்டு, கழிச்சல், காய்ச்சல், ரத்தக் கொதிப்பு, காமாலை, வீக்கம்,   மூச்சுத்திணறல், சீதபேதி,    விஷத்தொற்று, சொறி, சிரங்கு, புண்கள், விலாவலி, குட்டம், கரப்பான், கிரந்தி, மேகப்படை, ஊறல், வாந்தி, விக்கல், வயிற்று வலி, ஆஸ்துமா,   நிமோனியா ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

“ஆடாதொடை.. ..சன்னி    பதின்மூன்றும் விலக்கும்;     அகத்து நோய் போக்கும்”என அகத்தியர் குணபாடம் போற்றிப் புகழும் அழகு செடியே!

குரல் வளத்தைக் கொடுக்கும் மருந்து   செடியே!’

ஆடாதொடைக்குப் பா பாடாத நாவும் பாடும்’     என்ற பழமொழிக்கு வித்தாய் அமைந்த முத்து    செடியே!

சித்த  மருத்துவத்தில் பயன்படும் சிறப்புச் செடியே!

இலை, பூ, வேர், பட்டை என எல்லாம்    பயன்படும் நல்ல செடியே!

மாவிலை போன்ற இலைகளையுடைய  இலைச் செடியே!

வெள்ளை நிறப் பூப்பூக்கும் வினோதச் செடியே!

கைப்புச் சுவை, வெப்பத் தன்மை கொண்ட வேலிப்பயிர்ச்   செடியே!

குடிநீருக்குப் பொடி தரும் கற்பகச் செடியே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

முதல்வர்

ஏரிஸ் கலைக் கல்லூரி,

வடலூர்.📱9443405050.