அறிவோம் தாவரங்களை – தவசி முருங்கை செடி

தவசி முருங்கை செடி  (Justicia tranquebariensis)

தமிழகம் உன் தாயகம்!

தரிசு நிலங்கள், கடற்கரை ஓரங்களில் வளரும் மூலிகைச்செடி நீ!

உன் இன்னொரு பெயர் ‘சன்னியாசி முருங்கை!’.

கசப்புச் சுவையும் துவர்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்ட வினோதச் செடி நீ!

ஆஸ்துமா, இருமல், ஜலதோஷம், மூக்கில் நீர் வடிதல், உள்நாக்கு, நெஞ்சு சளி, இரைப்பு, மாந்தம், வயிறு உப்புசம், அஜீரணம், வயிற்றுவலி, காய்ச்சல் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத மூலிகை நீ!

கூட்டு, பொரியல், துவையல் செய்யப் பயன்படும் தமிழ்நாட்டுச் செடியே!

வாய்ப்புண்ணுக்குப் பச்சை இலை தரும் பசுமைச் செடியே!

முருங்கை இலை வடிவ இலை செடியே!

பத்திய உணவாகப் பயன்படும் சத்துச் செடியே!

வீடுகளில் வளர்க்கப்படும்  அழகு செடியே!

கொத்துக் கொத்தாய் வெண்பூக்களைக் கொண்ட முத்து செடியே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர் ச.தியாகராஜன்(VST)

முதல்வர்

ஏரிஸ் கலைக் கல்லூரி,

வடலூர்.📱9443405050.