அறிவோம் தாவரங்களை – கட்டுக்கொடி
கட்டுக்கொடி.
தமிழகம் உன் தாயகம்!
வேலிகளில் சாலையோர புதர்களில் மண்டிக்கிடக்கும் மருந்து கொடி நீ!
ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அதிகம் வளரும் அற்புதக் கொடி நீ!
34 வகைகளைக் கொண்ட மூலிகைக் கொடி நீ! பனைமரங்கள், ஈச்ச மரங்களில் படர்ந்து  கிடக்கும் பசுமைக் கொடி நீ!
சிறு கட்டுக்கொடி, பெருகட்டுக் கொடி! என இருவகையில் காணப்படும் இனிய கொடி நீ!
ரத்தபேதி, மூலம், நீரிழிவு, பெரும்பாடு, வாத நோய்கள், வயிற்றுவலி, வெள்ளைப்போக்கு, பால்வினை நோய்கள், விஷக்கடிகள், தோல் நோய்கள் ஆகியவற்றுக்கு ஏற்ற அற்புத மூலிகை நிவாரணி நீ!
கென்யா, பாகிஸ்தான் நாடுகளில்  வயிற்றுவலி,நரம்புத் தளர்ச்சிகளுக்குப்
பயன்படுத்தப்படும் நயன்மிகு மருந்துக்கொடி நீ!
பிலிப்பைன்ஸ், ஆப்பிரிக்கா நாடுகளில் பிறமணை (பிரிமணை),சிம்மாடு (சும்மாடு) செய்யப் பயன்படும் அருமைக் கொடியே!
ஆண்மையை அதிகரிக்கும் அரிய கொடியே!
பெண்மையை வன்மையாக்கும் நன்மை மிகக்கொடியே!
தாம்பத்திய வாழ்வின் ஊக்கமருந்தே!
தண்ணீரை அல்வா போல் மாற்றும் மந்திரக் கொடியே!
உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் உன்னத மருந்து கொடியே!
நாக்கு வடிவ இலைகளையுடைய நல்ல கொடியே!
உறுதியான தண்டு கொண்ட உன்னதக் கொடியே!
விதைகள் மற்றும் தண்டுகள் மூலம் இனவிருத்தி செய்யும் இனிய கொடியே!
எங்கும் வளரும் தங்கக் கொடியே!
நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)
முதல்வர்
ஏரிஸ் கலைக் கல்லூரி,
வடலூர்.📱9443405050.