அறிவோம் தாவரங்களை – சுரைக்காய்க்கொடி

சுரைக்காய்க்கொடி. (Lagenaria Siceraria)

தென்னாப்பிரிக்கா உன் தாயகம்!

உலகில் மனிதர்களால் பயிரிடப்பட்ட முதன்மை தாவரங்களில் நீயும் ஒன்று!

நீர்க் குடுவையாகப்பயன்படுத்தப்பட்ட நேர்த்தியாய் நீ!

பாரதம்,   அமெரிக்கா, ஐரோப்பா, கனடா நாடுகளில் அதிகமாகப் பயிரிடப்பட்ட அற்புத கொடி நீ!

கொழுப்புக்குறைப்பு,உடல் சூடு,நீர் எரிச்சல்,நீர்க்கட்டு, அஜீரணம் நா வறட்சி, கைகால் எரிச்சல், நீரிழிவு , தலைவலி, வீக்கம், பெரு வயிறு, கண் நோய், உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, மூலம்,கல்லீரல், காமாலை ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

சாம்பார், பொரியல், குழம்பு, கூட்டு, தோசை, கடைசல், சப்ஜி என எல்லா வகையிலும் பயன்படும் நல்ல கொடி நீ!

உடலை வலுவாக்கும் உன்னத காய்க்கொடியே!

விட்டமின் பி & சி சத்து நிறைந்த பச்சைக் கொடியே!

2 அடிநீள காய் கொடுக்கும் இனிய கொடியே!

45  நாட்களில் பலன் தரும் நல்ல கொடியே!

நீர்ச்சத்து நிறைந்த நார்க் கொடியே!

மலிவு விலையில் கிடைக்கும் மகத்துவ காய்க்கொடியே!

காய்கறிகளின் கற்பகமே!

வீட்டைக் கூரைகளுக்கு அழகு சேர்க்கும் நாட்டுக்காய் கொடியே!

கவர்ச்சி நாயகியே!

காய்களின் ராணியே!

நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க!உயர்க!

நன்றி :  பேரா.முனைவர். ச.தியாகராஜன்

நெய்வேலி.

📞9443405050.