நவம்பர் 10 முதல் திரையரங்குகள் திறப்பு : ஊரடங்கு தளர்வு அறிவிப்பு

சென்னை

கொரோனா தொடர்பான ஊரடங்கை மேலும் தளர்வுகளுடன் நவம்பர் 30 வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது.

கொரோனா தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது.  இந்த ஊரடங்கு ரத்து அல்லது மேலும் தொடர்வது குறித்து தமிழக முதல்வர் பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தினார்.  அதன் அடிப்படையில் மேலும் தளர்வுகளுடன் நவம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த தளர்வுகள் விவரம் பின் வருமாறு

  • பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளிட்டவை 10.11.2020 முதல் செயல்படும்
  • பள்ளிகள்/கல்லூரிகள், பணியாளர்கள் விடுதிகள் 10.112020 முதல் செயல்படும்
  • தற்காலிக இடத்தில் செயல்படும் பழ அங்காடி, மொத்த வியாபாரம் உள்ளிட்டவை 2.11.2020 முதல் மூன்று கட்டங்களாக கோயம்பேடு அங்காடிக்கு மாற்றப்படும்
  • புறநகர் மின்சார ரயில் சேவைகள் மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு முறைகளைச் செயல்படுத்தி நடத்த அனுமதி
  • சின்னத்திரை உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்புக்களும் ஒரே நேரத்தில் 150 பேருக்குமிகாமல்பணி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.  பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
  • திரையரங்குகள் மற்றும் மல்டிபிளெக்ஸ் அரங்குகள் உள்ளிட்டவை வழிகாட்டு முறையைப் பின்பற்றி 10.11.2020 முதல் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி
  • மதக கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள் 10.11.2020 முதல் வழிகாட்டு நெறிமுறைகளுடன் 100 பேர்கள் மட்டும் பங்கேற்று நடக்க அனுமதி
  • திருமணம் மற்றும் இறுதி ஊர்வலங்களில் 100 பேர் வரை கலந்துக் கொள்ள அனுமதி
  • உடற்பயிற்சி கூடங்களில் 1.11.2020 முதல் 50 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்குக் குறைந்த நபர்களுக்கு அனுமதி
  • தற்போது தடைகள் தொடரும் இடங்கள் :

நீச்சல் குளங்கள், கடற்கரை, உள்ளிட்டவை திறக்கப்படவில்லை.

சர்வ தேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு

புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களில் இருந்து வருவோருக்கும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களுக்கு செல்வோருக்கு இ பதிவு தொடர்கிறது.