சிவசேனா கூட்டணியின் குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் காணப்படுவது என்ன?

மும்பை

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அமைத்துள்ள குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் காணப்படும் அம்சங்கள் பின்வருமாறு

இந்த கூட்டணி உறுப்பினர்களான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நாட்டின் மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் மதிப்பு ஆகியவற்றை மதித்து இந்த குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை அமைத்துள்ளன.

விவசாயிகள்

1.       பருவம் மாறிப் பெய்த மழை மற்றும் வெள்ளத்தினால் துயருறும் விவசாயிகளுக்கு உடனடி உதவி வழங்கப்படும்

2.       விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள கடன் உடனடி தள்ளுபடி

3.       பயிர்களை இழந்து வாடும் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு மூலம் உடனடி நிவாரணம் வழங்க திட்டம் சீரமைப்பு

4.       விவசாயப் பொருட்களுக்குச் சரியான விலை கிடைக்க தேவையான நடவடிக்கைகள்

வேலைவாய்ப்பின்மை

1.       மாநில அரசுப் பணிகளில் காலி இடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை

2.       வேலையற்ற பட்டதாரி இளைஞர்களுக்கு மேற்படிப்பு உதவி

3.       மாநில மக்களுக்கு அனைத்து நிறுவனங்களிலும் 80% இட ஒதுக்கீடு

மகளிர்

1.       பெண்கள் பாதுகாப்புக்கு அரசில் முதலிடம் வழங்கப்படும்.

2.       பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பப் பெண்களுக்கு இலவசக் கல்வி

3.       அனைத்து நகரம் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் பணிபுரியும் மகளிர் விடுதி அமைத்தல்

4.       அங்கன்வாடி மற்றும் ஆஷா திட்டத்தில் பணி புரியும் மகளிருக்கு வழங்கப்படும் உதவித் தொகை அதிகரிப்பு

5.       மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் சேமிக்கப்படும் பணத்தைக் கொண்டு என் தொழில் முனைவோரை ஊக்குவித்தல்

கல்வி

1.       மாநிலத்தில் கல்வித் தரத்தை உயர்த்த தேவையான உடனடி நடவடிக்கைகள்

2.       விவசாயக் கூலிகள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் குடும்பத்து மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக் கடன்

நகர்ப்புற முன்னேற்றம்

1.       கிராம முன்னேற்றத் திட்டத்தைப் போல் நகர்ப்புறங்களில் உள்ள சாலைகளையும் மேம்படுத்துதல்.   நகராட்சி மற்றும் மாநகராட்சி சாலைகளை மேம்படுத்த தனி நிதி உதவி

2.       தற்போது மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் குடிசை வாசிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் 300 சதுர அடி பரப்பிலான குடியிருப்புக்குப் பதில்  500 சதுர அடி பரப்பிலான இலவச குடியிருப்புக்கள்

சுகாதாரம்

1.       அனைத்து மாவட்டம் மற்றும் வட்ட தலைநகரங்களில் ரூ.1 கட்டணத்தில் முக்கிய மருத்துவ சோதனைகள் வழங்கப்படும்.

2.       அனைத்து மாவட்டங்களில் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை அமைத்தல்

3.       மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் மருத்துவக் காப்பீடு

சமூக நீதி

1.       அரசியலமைப்பு சட்டப்படி பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் ஆதிவாசிகள் பட்டியலில் இணையத் தகுதி உள்ள பிரிவுகளை அந்த பிரிவில் இணைத்து அவர்களுக்கு ஒதுக்கீடு கிடைக்க வழி செய்தல்

2.       சமூக ரீதியாக பின் தங்கி உள்ளோருக்கான பல திட்டங்களை அரசே ஏற்று நடத்தும்

சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரம்

1.       மாநிலத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள், கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள் முன்னேற்றத்துக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்

மற்ற முக்கிய விவரங்கள்

1.       முதியோருக்கான நலத் திட்டங்கள் அதிகரிப்பு

2.       உணவு மற்றும் மருத்துவ பாதுகாப்பு விதிகளை மீறுவோருக்கு கடும் தண்டனை

3.       மாநில மக்களுக்கு மலிவு விலை உணவாக ரூ.10க்கு உணவு வழங்கல்

இவை அந்த திட்டத்தில் காணப்படும் அம்சங்களாகும்.

You may have missed