அறிவோம் தாவரங்களை – நுணா மரம்

நுணா மரம்.(Morinda tinctoria)

தெற்கு ஆசியா உன் தாயகம்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய சிறு  மரத்தாவரம் நீ!

ஐங்குறுநூறு (பா.342)நூலில் இடம்பெற்ற அழகு மரம் நீ!

எடைக் குறைவாய் வலிமையாய் உள்ள நீ மாட்டு வண்டிகளின் ‘நுகத்தடி’ மரமாகி மகிமை பெற்றாய்!

உன் தண்டு மஞ்சள் நிறம்.ஆகையால் நீ ‘மஞ்சணத்தி’ என்றானாய்!

30 அடிவரை உயரம் வளரும் வாசனைப்பூ மரம் நீ!

மஞ்சள் நாறி, மஞ்சள் வண்ணா, தணக்க மரம் எனப் பலவகைப்  பெயரில் விளங்கும் நுணா மரம் நீ!

சங்ககாலப் பெண்டிர் குவித்து விளையாடிய மலர் மரம் நீ!

கட்டில்,மேசை, நாற்காலி, மரப்பொம்மைகள், குங்குமச் சிமிழ், தெய்வ  சிலைகள் செய்யப் பயன்படும் நயன்மரம் நீ!

தோல் நோய், வயிற்றுப்புண், மூட்டு வலி, சர்க்கரை நோய், புற்றுநோய், இவற்றை நீக்கும் சித்த மருந்து மரம் நீ!

நாள்பட்ட புண்களுக்கு இலைச்சாறு தருவாய்!

காய்ச்சல், அரையாப்பு ஆகியவற்றிற்கு அழகிய பட்டைத் தைலம் தருவாய்!

பல் சொத்தை,பல்லரணை போக்க நுணாக்காய்ப் பொடி தருவாய்!தொண்டை நோய்களுக்கு பழச்சாறு தருவாய்!

சீதக்கழிச்சல்,ஆஸ்துமா விலகச் சிறந்த நல் கனி தருவாய்!

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க வேர் நீர் தருவாய்!

மழலைகளின் மாந்தம் போக்கும் மருந்து மரமே!

கரிசல் நிலங்களில், வேலிகளில் தானே வளரும் கற்பகத்தருவே!

ஏழைகளின் விறகடுப்பின் எரிபொருளே!

கானாங்கடியைப் போக்கும் ஊறுகாய் மரமே!

தேனாய் பயன்படும் நோனா மரமே!

நீவிர் தெய்வங்கள்,கோவில்கள் உள்ள வரை உய்வு பெற்று உன்னதமாய் வாழியவே.

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்

நெய்வேலி.

☎️9443405050