அறிவோம் தாவரங்களை – முருங்கை மரம்

முருங்கை மரம் (Moringa oleifera)

இலங்கை முதல் இத்தாலி வரை எங்கும் வளரும் செடி மரம் நீ!

30 அடி வரை உயரம் வளரும் மூங்கில் முருங்கை!

400 காய்கள் வரை காய்க்கும் கற்பக  விருட்சம்!

விதவைப் பாட்டிக்குச் சோறு போடும் மூத்த பிள்ளை!

தாம்பத்திய வாழ்வுக்கு தாம்பூலப் பாக்கு!

ஆபத்துக்  குழம்புக்குக் காய் கொடுப்பாய்!

இரும்புச்சத்து இல்லாதவர்க்கு இலை கொடுப்பாய்!

வாயுத் தொல்லை உள்ளோர்க்கு பூக்கொடுப்பாய்!

பணச்செடியாய் வளர்ப்போர்க்கு விதை கொடுப்பாய்!

ஒட்டவைக்க நினைப்போர்க்கு பசை கொடுப்பாய்!

கடையேழு வள்ளல்களும் நாணுமாறு வாரி வழங்கும் முதல் வள்ளல் நீ!

 பால் முருங்கை, பூனை முருங்கை எனப்பலவகை மரமாய் நிற்கும் வரம் நீ!

பூவில்லா நந்தவனம்போல் நீயில்லா  சாம்பார் மணமில்லை! மதிப்பு இல்லை!

வாழையைப் போல் தென்னையைப் போல் எங்களை வாழவைக்கும் உயிர் மரமே!

வாழ்த்தச் சொல் இல்லை!

வணங்கி மகிழ்கின்றேன்!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST).

நெய்வேலி.