டில்லி

ன்று முதல் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வருவோருக்கு புதிய பயண விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக  அதிகரித்து வருகின்றன.  இதையொட்டி பல உலக நாடுகளில் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு மத்திய சுகாதார அமைச்சகம் சில விதிமுறைகளை அறிவித்துள்ளன.  அவை இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

இந்த புதிய விதிமுறைகள் பின் வருமாறு :

  1. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்துப் பயணிகளும் கொரோனா விதிமுறைகள் அடிப்படையில் தங்களைக் குறித்த சுய விவரங்களைப் பயணத்துக்கு முன்பே ஏர் சுவிதா என்னும் தளத்தில் அளிக்க வேண்டும்.
  2. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்னும் சோதனை சான்றிதழை அளிக்க வேண்டும்.
  3. இந்த சான்றிதழுக்கான சோதனை பயணத்துக்கு 72 மணி நேரத்துக்குள் நடந்திருக்க வேண்டும்.  அத்துடன் இந்த சோதனை சான்றிதழின் உண்மைத்தன்மை குறித்து சுய ஒப்புதல் அளிக்க வேண்டும்.
  4. விமானத்தில் ஏறும் போது நடைபெறும் உடல் வெப்பம் உள்ளிட்ட சோதனைகளின் போது  கொரோனா அறிகுறிகள் இல்லாத பயணிகள் மட்டுமே விமானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
  5. மேலே குறிப்பிட்டுள்ள விதிகள் சாலை வழியாகவோ அல்லது கடல் வழியாகவோ பயணம் செய்வோருக்கும் பொருந்தும்.
  6. அது மட்டுமின்றி முக்கியமாகக் கடந்த 14 நாட்களில் பிரிட்டன், பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்துள்ள பயணிகள் விவரங்களை அந்தந்த விமான நிறுவனங்கள் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.
  7. மேலே குறிப்பிட்ட விதிகளின்படி பிரிட்டன், ஐரோப்பா. வ:ளைகுடா நாடுகளில் இருந்தோ அல்லது அந்த நாடுகள் வழியாகவோ வருவார் அனைவரும் சுயமாக மற்றும் சோதனை சான்றிதழ் மூலம்  தங்க:ளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதை விமான நிலையங்களில் இறங்கும் போதே நிரூபிக்க வேண்டும்”