யார் யாரிடம் எவ்வளவு அணு ஆயுதங்கள்? – தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்..!

புதுடெல்லி: இந்தியாவுடன் ஒப்பிடுகையில், சீனா & பாகிஸ்தான் நாடுகள் அதிக எண்ணிக்கையிலான அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமிலுள்ள சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது; சீனாவில் 350 , பாகிஸ்தானிடம் 160 அணு ஆயுதங்கள் உள்ளன. இந்தியாவிடம் 150 அணு ஆயுதங்கள் உள்ளன. உலகில் உள்ள மொத்த அணு ஆயுதங்களில் 90% அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் உள்ளன.

அவற்றில், அமெரிக்காவிடம் 5,800, ரஷ்யாவிடம் 6,375 அணு ஆயுதங்கள் உள்ளன. 2020ம் ஆண்டு துவக்கத்தில் எடுக்கப்பட்ட கணக்கின்படி, உலகளவில் 13,400 அணு ஆயுதங்கள் உள்ளன. கடந்த ஆண்டு13,865 அணு ஆயுதங்கள் இருந்தன.

இந்த ஆண்டு கணக்கின்படி, பிரான்சில் 290, பிரிட்டனில் 215, இஸ்ரேலில் 90, வட கொரியாவில் 30 முதல் 40 அணு ஆயுதங்கள் உள்ளன. இந்தியா, சீனா, பாகிஸ்தானை ஒப்பிடும்போது, அவை சிறிய நாடுகள்.

ஆனால், அந்த நாடுகள், புதிதாக அணு ஆயுதங்களை உருவாக்கும் முயற்சியிலும், அல்லது தயாரித்த அணு ஆயுதமைப்பை வெளிக்கொண்டு வரும் நடவடிக்கையிலும் அல்லது அதற்கான நோக்கம் தங்களிடம் உள்ளது எனவும் ஏற்கனவே தெரிவித்துவிட்டன.

சீனா தன்னிடம் உள்ள அணு ஆயுத அமைப்பை நவீனப்படுத்தி வரும் நிலையில், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளும் தங்களிடம் உள்ள அணு ஆயுத பலத்தை அதிகரித்து வருகின்றன. வட கொரியா, தனது ராணுவ ரீதியிலான அணுஆயுத திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா நாடுகள் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை நவீனப்படுத்தி வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.