அறிவோம் தாவரங்களை – நத்தைச்சூரி செடி.

நத்தைச்சூரி செடி.(permacoce articularis)

வயல்வெளிகள், வாய்க்கால் ஓரங்கள்,    ஈரப்பதமான இடங்களில்     தானாக வளர்ந்திருக்கும் பூண்டு வகைத்தாவரம் நீ!  

குழி மீட்டான்,   தாருணி, நத்தைச்சுண்டி,தொல்லியாக் கரம்பை,நத்தை வராளி எனப் பல்வேறு   பெயர்களில் விளங்கும் ஒரு பொருள் குறித்த பல சொல் கிளவி நீ!

சித்தர்கள் போற்றும்  மஹா மூலிகை நீ! 

உன் காற்று மற்றும் சாறு பட்டால் நத்தையின்ஓடுவெடிக்கும் ; இறக்கும் என்பது சித்தர் வாக்கு!.

உடல் சூடு, உடல் பருமன் குறைப்பு, தாய்ப்பால் அதிகரிப்பு, ஆண்மை பலம் அதிகரிப்பு, நரம்பு பாதிப்பு, சிறுநீரகக்   கற்கள், கண் எரிச்சல், முடி உதிர்தல்,  இரத்த சுத்தி,  புற்றுநோய்,  உடல் பருமன்,  மாதவிடாய்க் கோளாறு,  ஊளைச்சதை, சளி, இருமல், மூலநோய், உடல் சூடு, எலும்பு வலிமை ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

விதை, வேர், தண்டு, இலை, மலர், காய்கள் என எல்லாம் பயன்படும் நல்ல செடியேசித்துவேலைகளுக்குப் பயன்படும் சின்னச் செடியே!

உடலுக்கு வலுவைத் தரும் கற்பக மூலிகையே!

சிறிய இலைகளை உடைய சின்னச் செடியே!

பறவைகளுக்கு விதை உணவு தரும் விந்தைச் செடியே!

ரேகைகள்இல்லா இலை செடியே!

நீல நிறப் பூப்பூக்கும் ஞானச் செடியே!

நிறைய விலைபோகும் வேர் செடியே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

முதல்வர்

ஏரிஸ் கலைக் கல்லூரி,

வடலூர்.📱9443405050.