அறிவோம் தாவரங்களை – திப்பிலி

திப்பிலி.(Piper longum).

கி.மு.5.ஆம்நூற்றாண்டு முதல் கிரேக்கர்,அமெரிக்கர் பயன்படுத்தும் மருந்துக்கொடி!

தென்னந் தோப்புகளின் ஊடுபயிர் நீ!

5 ஆண்டுகள் வரை  மகசூல் கொடுக்கும் பணப்பயிர் நீ!

3 அடி வரை உயரம் வளரும் பருவத் தாவரம்!

மிளகுக் கொடியின் உறவுக் கொடி!

வெற்றிலைக் கொடியின் தம்பிக் கொடி!

கிரேக்க நாட்டு  ஆய்வாளர் ‘தியோபிரசுடஸ்’ ஆய்வுக்குறிப்பில் இடம் பெற்ற  பழமைக்கொடி!

மூன்றாண்டுகளுக்கு பிறகு கண்டந்திப்பிலி ஆகும் மருந்து வேர்!

திரிகடுகத்தின் மூன்றாம் பொருள் நீ!

காசநோய், காய்ச்சல், கபம், கோழைச்சளி,   இருமல், இவற்றுக்கு ஏற்ற இனிய மூலிகை!

வாய்வுத் தொல்லை, வயிற்றுப் பொருமல், வறட்டு இருமல், இளைப்பு, களைப்பு,  வெள்ளைப் படுதல், பெரும்பாடு இவற்றுக்கும் ஏற்ற நல்மூலிகை மருந்து பொருள்!

மதுபான பொருள்கள்,  வாசனைப் பொருள் தயாரிப்பில் அங்கம் வகிக்கும் தங்க்கொடி!

ஏழரை  பெட்டியில் இடம்பெறும் மசாலா மணியே!

பூக்கும் தாவரக் கொடியே!

மக்களைக்  காக்கும்  மருத்துவ ராணியே!

நீவிர் மணமும் மகிழ்வும் பெற்றுத்  தினமும்  செழிப்பாய் வாழ்க!வளர்க!உயர்க!

நன்றி : Prof.Dr.S.Thiyagarajan. (VST)

NeyveliTownship.

☎️9443405050.