அறிவோம் தாவரங்களை – பட்டாணி செடி

அறிவோம் தாவரங்களை – பட்டாணி செடி

பட்டாணி செடி.(Pisum sativu).

தென்மேற்கு ஆசியா உன் தாயகம்!

காடுகளில் தானே வளர்ந்த தேன்செடி நீ!

உருளை வடிவ பருப்பு வகை செடி நீ!

உன் விதை பச்சை நிறத்தில் இருப்பதால் நீ பச்சைப்பட்டாணி ஆனாய்!

சுமார்1300 வகை கொண்ட அற்புத செடி நீ!

கி.மு.2000. ஆண்டுகளுக்கு முன்பே சீனர்கள் வளர்த்த  செம்மை செடி நீ!

கண் பார்வை, மூளை வளர்ச்சி, உடல் வலிவு, நுரையீரல் நோய், மன நோய், இதய நலம், கொழுப்புக் குறைப்பு, மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

பைபிள் போற்றும் பசுமை செடி நீ!

ஆஸ்திரிய மரபியல் விஞ்ஞானி ‘கிரிகோர் மெண்டலி’ன் ‘பரம்பரை விதிகள்’ ஆய்வின் அடிப்படை மூலமே! நார்ச்சத்து நிறைந்த நல் வகை செடியே!

75  நாட்களில் பலன் தரும் இனிய செடியே!

ஹெக்டேருக்கு 12.டன் வரை பலன் தரும் பணப்பயிரே!

ஓராண்டு வரை உயிர் வாழும் உன்னத செடியே!

குளிர்கால தாவரமே!

களிமண் நிலத்தின் கற்பக செடியே!

மண் அரிப்பைத் தடுக்கும் மகத்தான காவலனே!

உழவனின் நண்பனே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க!உயர்க!

நன்றி :  பேரா.முனைவர் ச.தியாகராஜன்.

நெய்வேலி.

📱9443405050.