அறிவோம் தாவரங்களை – கோதுமை

கோதுமை. (Triticum)

ஜோர்டான், துருக்கி ,சிரியா  உன் தாயகம்!

உலகில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் இரண்டாவது தானியப் பயிர் நீ!

ஏழைகளின் வீட்டுக் கூரை நீ!

உலகில் முதன் முதலில் பயிரிடப்பட்ட தானியங்களில் நீயும் ஒன்று!

கி.மு.9000.இல் துருக்கியில் “கோபேக்லி தெபே”வில் நீ உதயமானாய்,வெண்கோதுமை, செங்கோதுமை, ஊதா கோதுமை எனப் பல வண்ணங்களில் வளரும் பசுமைப் பயிர் நீ!

முதுகுவலி, மூட்டுவலி, புளியேப்பம், தீக்காயம் கட்டிகள், கபம், வியர்க்குரு, கபம்,  நீரிழிவு, உடல்பருமன், அஜீரணம், வாயு ,தொண்டைக் கரகரப்பு, முகப்பரு ,புற்றுநோய், இதய நலம் ஆகியவற்றிற்கு  ஏற்ற அற்புத நிவாரணி நீ!

புல்கா, சப்பாத்தி, பூரி,  கிச்சடி செய்யப் பயன்படும்  இனிய உணவுப் பயிர் நீ!

பிஸ்கட், பிரட், நூடுல்ஸ், மதுபானம், கோதுமை அல்வா,  கேக், ஸ்வீட் ஆகியவை செய்யப் பயன்படும் அற்புத தானியப் பயிர் நீ!

பாபிலோனியா பேரரசின் எழுச்சி நாயகனே!

சர்வதேச வணிகத்தில் முதலிடம் வகிக்கும் உணவு தானியப் பயிரே!

உணவு தானியமாகப் பயன்படும் உன்னதப் பயிரே!

கால்நடைகளின் தீவனமே!

பஞ்சாப் மக்களின் முதன்மை உணவுப் பயிரே!

அனைத்து காலத்திற்கும் ஏற்ற அற்புத உணவுப் பயிரே!

ஆரோக்கியத்தைக் கொடுக்கும் அழகு தானியப் பயிரே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

முதல்வர்

ஏரிஸ் கலைக் கல்லூரி,

வடலூர்.📱9443405050.