அறிவோம் தாவரங்களை – பிளம்மரம்

அறிவோம் தாவரங்களை – பிளம்மரம்

பிளம்மரம். (Prunus salicina)

ஈரான் உன் தாயகம்! ஆதிமனிதர்கள் வளர்த்த முதல் பழ மரங்களில் நீயும் ஒன்று!

 

உன் உலர்ந்த கனியே ‘ஆல்பக்கோடா!.’

 

ஆப்பிள், திராட்சை, அத்தி மரத் தாவரங்கள் உன் உடன்பிறப்புகள்! புளிப்புச் சுவையும் இனிப்புச் சுவையும் கொண்ட புனித மரம் நீ!

 

  1. வகைகளில்  எங்கும் காணப்படும் இனிய மரம் நீ!10.மீ.வரை உயரம் வளரும் பசுமை மரம் நீ!

 

சிவப்பு, ஊதா, மஞ்சள், நிற பழங்கள் தரும் மகிமை மரம் நீ !

 

சீனா, ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் அதிகம் காணப்படும் அற்புத

மரம் நீ!

 

வாந்தி, அசீரணம், மலச்சிக்கல், கொழுப்புக் குறைவு ,எலும்பு வலிமை, புற்றுநோய், காய்ச்சல், வயிற்றுப் புண், கண்பார்வை, இதயநலம், பதட்டம், தலைமுடி  உதிர்வு, எடைக்குறைவு, சிறுநீரகக் கோளாறுகள், தழும்புகள் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

 

ஜாம், ஜெல்லி, ஒயின், பிராந்தி தயாரிக்கப் பயன்படும் பழ மரமே! நார்ச்சத்து   மிக்க நயன்மிகு

மரமே! உலகில்

 

ஆண்டிற்கு 12.1 மில்லியன்டன்பழம் தரும்  கற்பக மரமே!

 

அழகும் கவர்ச்சியும்    கொண்ட அற்புதமரமே!

 

நீவிர் பல்லாண்டு   பயன்தந்து வாழ்க! வளர்க! உயர்க!

 

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

முதல்வர்

ஏரிஸ் கலைக் கல்லூரி,

வடலூர்.📱9443405050