அறிவோம் தாவரங்களை – கொய்யா மரம்

அறிவோம் தாவரங்களை – கொய்யா மரம்

கொய்யா மரம்.(Psidium guajava).

அமெரிக்கா உன் தாயகம்!

குறைந்த பராமரிப்பில் நிறைந்த லாபம் தரும் சிறந்த மரம் நீ!

ஏழைகளின் ஆப்பிள் பழ மரம் நீ!

எல்லா மண் வகைகளிலும் வளரும் இனிய மரம் நீ!

மலச் சிக்கல்,பேதி, நீரிழிவு, பசியின்மை, விக்கல், புற்று நோய், இதய நலம், பல்வலி, கண் பார்வை, மன அழுத்தம், மூலம், உடல் எடை குறைப்பு, ரத்த அழுத்தம் சமநிலை ஆகியவற்றுக்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

ஆரஞ்சு பழத்தை விட 3 மடங்கு விட்டமின் சி கொண்ட வினோத மரம் நீ!

வேர், இலை, பட்டை, செங்காய், சாறு, தேநீர், கசாயம் என பல்வகையில் பயன்படும் நல்வகைமரம் நீ!

18 மாதத்தில் பலன் கொடுக்கும் பதிமுகம் மரம் நீ!

உளுந்து, பயிர்கள் வளர இடம் தரும் சிறந்த மரம் நீ!

ஒட்டுக்கன்று,  மொட்டுப் பரவல் முறை, தரை,  வான்வழி பதியன் முறை  & விதை வழியாகவும்  இனப் பெருக்கம் செய்யும் இனிய மரமே!

வறட்சியைத் தாங்கி வளரும் புரட்சி மரமே!

ஹெக்டருக்கு 25 டன் வரை மகசூல் தரும் மகத்துவ மரமே!

தோட்டங்களில்  வளர்க்கப்படும் நாட்டு மரமே!

ஏக்கருக்கு 2.4 லட்சம் வரை லாபம் கொடுக்கும் வேளாண் மரமே!

உப்பு நீரிலும் வளரும் ஒப்பு இலா மரமே!

நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்

நெய்வேலி.

☎️9443405050