Random image

கல்லறைகளில் பதிக்கப்படும் (QR code) கியு ஆர் கோட்

வாஷிங்டன்

றந்தவரை புதைக்கும் கல்லறையிலும் பதிக்கப்படும் கியு ஆர் கோட்  – QR code

தற்போது QR code என்பது என்னவென்று தெரியாதோர் கிடையாது.

இந்த கியூ ஆர் கோடை செல்போன் காமிராவில் காட்டினால் விவரங்கள் டவுன்லோடு ஆகும்.

அது மட்டுமின்றி செல்போனில் உள்ள வாட்ஸ்அப் போன்ற செயலிகளைக் கணினி மூலம் இயக்கவும் இந்த QR code பயன்படுகிறது.

இதை ஸ்கேன் செய்வது மூலம் இதில் உள்ள வீடியோ,  டாகுமெண்ட் உள்ளிட்ட அனைத்தையும் படிக்க முடியும்,

தற்போது இந்த QR code இறந்தவர்களின் கல்லறைகளிலும் பதிக்கப்படுகிறது.

இந்த QR code இல் இறந்தவரின் வீடியோ, வாழ்க்கை சரிதம் போன்றவை பதியப்படுகின்றன.

இறந்தவரின் சந்ததியினர் அதன் பிறகு இந்த கல்லறைக்குச் சென்று இதை செல்போன் காமிரா மூலம் ஸ்கான் செய்யலாம்.

அப்போது அவர்களால் இறந்தவருடைய வீடியோவை காணலாம்.

அல்லது இறந்தவருடைய வாழ்க்கை சரிதையை டவுன்லோடு  செய்து படிக்க முடியும்.