அறிவோம் தாவரங்களை – முள்ளங்கி செடி

முள்ளங்கி செடி. (Raphanus sativus).

மேற்கு ஆசியா உன் தாயகம்!

வெப்பமண்டல நாடுகளில் வளரும் கிழங்கு செடி நீ!

கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் உள்ள முதன்மை செடி நீ!

எகிப்து, கிரீஸ், ரோம் நகரங்களில் அதிகம் வளர்ந்த அழகு செடி நீ!

குட்டை வால் முள்ளங்கி, சுவர் முள்ளங்கி, மஞ்சள் முள்ளங்கி எனப் பல்வேறு பெயர்களில் பரிணமிக்கும் நல்வகை கிழங்கு செடி நீ!

சிறுநீரகக் கற்கள்,வாத நோய், கல்லீரல்,பித்தப்பை நலம், நினைவாற்றல், எடை குறைப்பு,  இதய நலம், அஜீரணம், மூலம், மலச்சிக்கல், சளி, நீரிழிவு நோய், தலைவலி, மயக்கம், சீதபேதி, பூச்சிக்கடி, காய்ச்சல், மஞ்சள் காமாலை, நரம்பு சுருள், வாதம், கப நோய் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

சட்னி, பொரியல், சாம்பார், குழம்பு, கூட்டு, சூப் என எல்லா வகையிலும் பயன்படும் நல்வகை கிழங்கு செடியே!

நீர்ச்சத்து நிறைந்த வேர் கிழங்கு செடியே!

60 நாட்களில் பலன் கொடுக்கும் அழகு செடியே!

ஹெக்டேருக்கு 30.டன் வரை மகசூல் தரும் மகிமை செடியே!

எல்லா மண்ணிலும் வளரும் இனிய கிழங்கு செடியே!

நீவீர் பல்லாண்டு வாழ்க!வளர்க!உயர்க!.

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்

நெய்வேலி.

📱9443405050.