தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை : விவரங்கள் இதோ

தூத்துக்குடி

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் உண்டாகி உள்ள பிரச்னைகள் குறித்த விவரங்கள் இதோ

இந்தியாவில் தாமிரம் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலைகள் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்தின் இந்தால்கோ தொழிற்சாலை ஆகியவைகள் ஆகும்.   இது தவிர அரசு நிறுவனமான இந்துஸ்தான் காப்பர் நிறுவனமும் தாமிரத்தை உற்பத்தி செய்து வருகிறது

இதில் அரசு நிறுவனமான இந்துஸ்தான் காப்பர் நிறுவனம் 99500 டன்கள் தாமிரம் உற்பத்தி செய்கிறது.   தனியார் நிறுவனங்களில் இந்தால்கோ 5 டன்களும் ஸ்டெர்லைட் 4 டன்களும் தாமிரம் உற்பத்தி செய்கின்றன.    இதில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை தமிழகம், தாத்ரா, நாகர் அவேலி ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையில் தற்போது உற்பத்தி செய்யப்படும் 4 லட்சம் டன்னை 8 லட்சம் ஆக்க அனுமதி கோரியது.    இந்த ஆலையினால் தூத்துக்குடிப்பகுதி கடும் மாசடைவதாகவும் பலர்  நோய்வாய்ப்படுவதாகவும் கடந்த 20 வருடங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.   இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தனது உற்பத்தியை இரட்டிப்பாக்க அனுமதி கோரியது மக்களுக்கு மேலும் அச்சத்தை உண்டாக்கி உள்ளது.

எனவே கடந்த 100 நாட்களுக்கும் மேலாக இந்த ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் போராடி வருகின்றனர்.   அந்தப் போராட்டத்துக்கு மாநில அரசு செவி சாய்த்து ஆலையை மூடாததால் பொதுமக்கள் அரசுக்கு எதிராக மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகை இட்டு நேற்று போராட்டம் நடத்தினர்.   அதன் பின் வன்முறை வெடித்ததும்,  காவல்துறையின் துப்பாக்கி சூட்டால் 11 பேர் இறந்ததும் தெரிந்ததே.