இன்று விசேஷ சந்திர கிரகணம் : விவரங்கள் இதோ

டில்லி

ன்று சூப்பர் பிளட் உல்ஃப் மூன் என்னும் சந்திர கிரகணம் நிகழ உள்ளது.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் உண்டாகிறது.   இவற்றில் விசேஷமான சூப்பர் பிள்ட் உல்ஃப் மூன் என்னும் நிகழ்வு இன்று நிகழ உள்ளது.   இது எப்போதோ ஒருமுறை நிகழ்வது என்பதால் வானிலை ஆய்வாளர்கள் இது குறித்து பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். நாம் அவற்றை இங்கு காண்போம்.

இன்று பூமிக்கு மிகவும் அருகில் சந்திரன் வருவதால் இன்று நிலவு பிரகாசமாகவும் பெரியதாகவும் தெரியும்.  மேலும்  சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வருவதால் சூரிய வெளிச்சம் மறைக்கப்பட்டு பூமியின் புழுதி மற்றும் காற்று மூலம் மட்டும் ஒளி வருவதால் நிலவு மிகவும் சிகப்பு பந்து போல் காணப்படும்.

அத்துடன் ஜனவரி மாதம் பவுர்ணமி அன்று ஆங்கிலத்தில் உல்ஃப் என அழைக்கப்படும் ஓநாய்கள் பயங்கரமாக ஊளையிடுவது வழக்கம்.   பசியால் தவிக்கும் ஓநாய்களுக்கு நிலவு ஒரு சிவப்பு பழம் போல் தெரிவதால் இன்று ஓநாய்கள் பயங்கராமக ஊளையிடும்.   இதுவே இந்த பெயருக்கான காரணம் ஆகும்.

இந்த கிரகணம் பூமியின் வடக்கு பாகத்தில் உள்ள பிரிட்டன், வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் முழுமையாக தெரியும்.   இந்தியாவின் இந்த அபூர்வ கிரகணம் தெரியாததால் இந்தியர்களால் இதை காண முடியாது.   அத்துடன் ஆஸ்திரேலியா உள்ளிட்ட தென்பகுதி நாடுகளிலும் இந்த கிரகணம் தெரியாது.

சூரிய கிரகணத்துக்கு சொல்லப்ப்டுவது போல் சந்திர கிரகணத்தை காண எந்த ஒரு எச்சரிக்கையும் கிடையாது.   ஆகவே இதை நேரடியாக காண முடியும்.  ஆனால் மேக மூட்டம் பூமியை சுற்றி இப்போது அதிகம் உள்ளதால் இந்த கிரகணத்தை காண முடியாமல் போகவும் நேரிடலாம்.

இது இந்த பத்தாண்டுகளின் கடைசி கிரகணம் என்பதால் இதை காண பலரும் ஆர்வத்துடன் உள்ளனர்.