தெலுங்கானா பத்மாட்சி கோயில்

பத்மாட்சி கோயில்  என்பது இந்திய மாநிலமான தெலங்கானாவில் வாரங்கல் பகுதியில் அமைந்துள்ள ஒரு அண்மைப்பகுதியான ஹனுமகொண்டாவில் அமைந்துள்ள ஒரு பழைமையான ஒரு கோயிலாகும். இங்கு, 12ஆம் நூற்றாண்டில் காக்கத்திய மன்னர்களால் கட்டப்பட்டு பிரதான தெய்வமாக பத்மாட்சி (லட்சுமி) தெய்வத்திற்கு இக்கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

பத்மாட்சி குட்டா அல்லது கடலாலய பசாதி என்பது அனமகொண்டா நகரின் மையத்தில் ஒரு மலையடிவாரத்தில் அமைந்துள்ள பத்மாவதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயத்தில் அமைந்துள்ள ஒரு சமண கோவிலாகும். இது முதலில் காக்கத்தியர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது.

காக்கத்திய மன்னர்கள் ஆலயத்தைப் புதுப்பித்து நிறுவும் வரை, முன்பு இது ஒரு ‘பசாதி’யாக (சமண கோவில்) இருந்தது. கருவறையில், ஒரு பெரிய தீர்த்தங்கர பார்சுவநாத் உருவம் உள்ளது. வலதுபுறத்தில் யக்ச தரனேந்திரனும், இடதுபுறம் பத்மாவதி (லட்சுமி) தெய்வமும் உள்ளன. உருவங்கள் அனைத்தும் பாறையிலிருந்து செதுக்கப்பட்டவை. தற்போது மீட்டெடுக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளன.

இந்த கோவிலில் சமண தீர்த்தங்கரருக்கும், பிற சமண தெய்வங்களுக்கும் சிற்பங்கள் உள்ளன.

பதுகம்மா பண்டிகை

வருடத்திற்கு ஒரு முறை, புகழ்பெற்ற பதுகம்மா விழாவைக் கொண்டாடப் பெண்கள் இங்குக் கூடி பத்மாட்சி மலையின் அடிவாரத்தில் உள்ள குளங்களில் பூக்களைத் தூவுகிறார்கள் .

கட்டிடக்கலை

கோயிலின் விதிவிலக்கான அம்சம் அன்னகொண்டா தூண் என்று அழைக்கப்படும் ஒரு தூணின் சுவாரசியமான நான்கு முகங்கள் ஆகும். இது கருங்கல்லால் செய்யப்பட்ட நாற்கர நெடுவரிசையாகும். இது கோயிலின் நுழைவாயிலில் உள்ளது.