2 நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் என்னென்ன?

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி, 2 நாட்களுக்குள் முடிந்துவிட்டதையடுத்து, சிலபல முன்னாள் வீரர்கள் தொடர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

ஆனால், கடந்த 1946ம் ஆண்டு முதல், இந்த கடைசி டெஸ்ட் போட்டிவரை, மொத்தம் 8 டெஸ்ட் போட்டிகள் 2 நாட்களில் முடிவடைந்துள்ளன. அவற்றுள் 7 போட்டிகள் 2000ம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்றவை என்பதும் கவனிக்கத்தக்கது.

* 1946 – நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா

* 2000 – இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ்

* 2002 – ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்

* 2005 – தென்னாப்பிரிக்கா vs ஜிம்பாப்வே

* 2005 – நியூசிலாந்து vs ஜிம்பாப்வே

* 2017 – தென்னாப்பிரிக்கா vs ஜிம்பாப்வே

* 2018 – இந்தியா vs ஆப்கானிஸ்தான்

* 2021 – இந்தியா vs இங்கிலாந்து