திருக்குரக்கா குந்தளேஸ்வரர் சுவாமி ஆலயம்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கருப்பறியலூரில் இருந்து வடக்கே 2 கி.மீ தூரத்தில் உள்ள சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல் மிக பழமை வாய்ந்த காவிரி வடகரைத்தலங்களில்
28 வது தலமாகவும் தேவாரபாடல் பெற்ற  274 தலங்களில் 28 வது தலமாகவும் விளங்கும்,
சேதுக்கரையில் (ராமேஸ்வரம்) சிவபூஜை செய்ய எண்ணிய ராமர், லிங்கம் கொண்டு வரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். ஆஞ்சநேயரும் லிங்கம் எடுத்து வரச் சென்றார். இதனிடையே, சீதாதேவி கடல் மணலில் லிங்கம் சமைக்கவே, ராமர் அந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். அதன்பின்பு லிங்கத்துடன் வந்த ஆஞ்நேயர், ராமர் சிவபூஜை செய்துவிட்டதை அறிந்து கோபம் கொண்டார். மேலும், மணல் லிங்கத்தை தனது வாலால் உடைக்க முயன்றார். முடியவில்லை.
சிவ அபச்சாரம் செய்ததால் மன்னிப்பு வேண்டிய அவர் இத்தலத்தில் சிவபூஜை செய்தார். அப்போது சிவனுக்கு மலருடன், தான் காதில் அணிந்திருந்த குண்டலத்தையும் படைத்து வணங்கி மனஅமைதி பெற்றார். ஆஞ்சநேயர் குண்டலம் வைத்து வழிபடப்பட்டவர் என்பதால், இத்தல சிவன் “குண்டலகேஸ்வரர்’ என்றும் பெயர் பெற்றார்.
அம்பாள் குந்தளநாயகி தனிச் சன்னதியில் அருளுகிறாள். வில்வம் இத்தலத்தின் விருட்சம். திருநாவுக்கரசர் இத்தலம் குறித்து பதிகம் பாடியுள்ளார். இக் கோயிலில் தெட்சிணாமூர்த்தி சற்று வலதுபுறமாக திரும்பியுள்ளார் என்று தலவரலாறு கூறும் தலமாக திகழும்
திருநாவுக்கரசரால் பதிகம்  பாடபட்ட தலமாகும்.