அறிவோம் துவாரங்களை – மூக்குத்தி பூண்டு

அறிவோம் துவாரங்களை – மூக்குத்தி பூண்டு.
மூக்குத்தி பூண்டு. (Tridax procumbens)
மத்திய அமெரிக்கா உன் தாயகம்!
தரிசு நிலங்கள், தோட்டங்கள்,புல்வெளிகளில்  வளர்ந்திருக்கும் சிறுசெடி நீ!
ஆங்கிலத்தில் நீ ‘கோட் பட்டன்’  இந்தியில் நீ கமாரா, சமஸ்கிருதத்தில் நீ ஜெயந்தி வேதம், இலங்கையில் நீ கோணேசர் மூலிகை!
உன்னைப் பார்த்ததும் மகிழ்ந்த மழலைகள் காம்புடன் உன்னைக் கிள்ளி எடுத்து ‘தாத்தா,தாத்தா தல கொடு’எனச் சொல்லிவிளையாட உதவும் சின்ன பூச்செடி நீ !
கிணற்றடிப்பூண்டு, காயப்பச்சிலை, தாத்தாபூண்டு, வெட்டுக்காயப் பச்சிலை, செருப்புத்தழை,
கிணற்றுப் பாசான்,  ஊசிப்பூண்டு, அரிவாள்மனை பூண்டு, முருகன் பச்சிலை எனப் பல்வேறு பெயர்களில் பரிணமிக்கும் ஒரு பொருள் குறித்த பல சொல் கிளவி நீ!
கபம் ,  வெட்டுக்காயங்கள், குருதி நிறுத்தம்,சுவாசக் கோளாறு, மூக்கடைப்பு, இருமல், நீர் கோர்ப்பு, பேதி, வயிற்றுப்  போக்கு, விஷக்கடி, உயர் ரத்த அழுத்தம்,  நீரிழிவு நோய், கல்லீரல் & மண்ணீரல் காயங்கள்,   முடி உதிர்தல், பொடுகு, தீக்காயம், பல்வலி, தலைவலி ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
தோடு போடுவதால் ஏற்படும் காயங்களுக்கான  மருந்து செடியே!
போர்வீரர்களின் காயங்களுக்கானக்  கற்பக மூலிகையே!
மஞ்சள் நிறப் பூப்பூக்கும் மகிமைச் செடியே!
ஒருபூவில்  சுமார் 1500. விதைகளைக் கொண்ட  அழகு செடியே!
காற்றின் மூலம் இனப்பெருக்கம் செய்யும் விதைச் செடியே!
உலகெங்கும்    காணக் கிடக்கும் உன்னதச் செடியே!
நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)
முதல்வர்
ஏரிஸ் கலைக் கல்லூரி,
வடலூர்.📱9443405050.