வில்வம்

வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் #பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது.

 வீடுகளில் வில்வ மரம் வளர்ப்பது நல்லது. நாம் வீட்டில் வில்வமரம் நட்டு வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை…

 மேலும் அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் ( திருவமுது) செய்த புண்ணியம் உண்டாகும். கங்கை முதலான புண்ணிய நதிகளில்  நீராடிய பலன் கிடைக்கும். 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.

இம்மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் நமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.

சிவனிற்குப் பிரியமான #வில்வார்ச்சனை மூலம் #சிவனின் திருவருட் ( சிவபெருமானின் திருவருளை) கடாட்சத்தைப் பெறமுடியும்.

வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

வீட்டில் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் #நரகமில்லை மேலும் எமபயம் ஒரு  போதும்  வாராது.

ஒரு வில்வ இதழைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்வர்ண புஷ்பங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்குச் சமமானதாகும்.

சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.

வில்வம் பழத்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவையாக்கி அதில் விபூதியை வைத்துப் பயன் படுத்துவது மேலான செயலாகக் கொள்ளப்படுகிறது.

சிவபெருமானுக்குப் பிரியமான பத்திரம் வில்வமாகும்.

வில்வத்தில் லட்சுமி வசம் செய்கிறாள். வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம். சிரேஷ்ட வில்வம். கந்த பலம் எனப் பல பெயர்களால் சுட்டப்படுகிறது.

மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் ( உயிர்களின்) பாவங்களைப் போக்குவன ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம்.

எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும் இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும், நன்மைகளும் அடைவார்கள்.

வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன

– நெட்டிசன் அசோக் குமாரின் முகநூல் பதிவு