ண்டன்

நாளைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மோத உள்ள இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி குறித்த விவரங்கள்.

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2019 இன் நாளைய ஆட்டத்தில் இந்திய அணியும் மேற்கிந்திய அணியும் மோதுகின்றன. இந்த அணிகல் ஏற்கனவே பலமுறை மோதி உள்ளன.

இதுவரை இரு அணிகளும் போட்டியிட்ட 128 ஒரு நாள் போட்டிகளில் 59 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்திய அணி 62 போட்டிகளில் வென்றுள்ளது. இதை தவிர இரு போட்டிகள் சமனிலும் 3 போட்டிகள் முடிவின்றியும் நடந்துள்ளன.

உலகக் கோப்பை போட்டிகளில் இது வரை இந்தியாவும் மேற்கிந்திய தீவுகளும் 8 முறை மோதி உள்ளனர். இந்திய அணி 5 முறையும் மேற்கிந்திய அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 1983 ஆம் வருட உலகக் கோப்பை போட்டியின் இறுதிச் சுற்றில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணையை 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 1983 ஆம் வருடம் ஜுன் 9 ஆம் தேதி மான்செஸ்டரில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 34 ரன்களில் வென்றது. குவாலியரில் 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் 5 விக்கட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

இதைப் போலவே 2011 மார்ச் மாதம் 20 ஆம் தேதி சென்னையில் நடந்த போட்டியிலும், 2015 ஆமாண்டு மார்ச் 6 அன்று பெர்த் நகரில் ந்டந்த போட்டியிலும் இந்தியா மேற்கிந்திய அணியை தோற்கடித்தது.