அறிவோம் தாவரங்களை – இஞ்சி

அறிவோம் தாவரங்களை – இஞ்சி

இஞ்சி (Zingiber officinale)

தென்கிழக்கு ஆசியா உன் தாயகம் !

மானிடர் நலம் பெற்று வாழ்வதற்காகவே அவதாரம்  எடுத்த அற்புதப்பிறவி நீ!

பொங்கல்   பானையின் தங்க  அட்டிகை!

உன்னை நசுக்கிப் போட்டாலும் காரம் குறையாமல் காப்பாற்றும் இயற்கைச் சூரணம்!

எலுமிச்சைக்கு புளிப்புச் சிறப்பு!.

இஞ்சிக்கு எரிப்புச் சிறப்பு !

உணவை இழுத்து எடுத்து உண்ண வைக்கும் ஈர்ப்புத் துவையல் நீ!

வயிறு உப்புசத்தை வற்றச் செய்யும் மருந்துக் கசாயம்!

உடல் வாயுவைப் போக்கி  உற்சாகம்  பெருக்கும் இஞ்சிக்குழம்பு!

பித்தம் போக்கும் பிதாமகன் நீ!

மழலைகள் விரும்பும் இஞ்சி முறப்பா!

‘காலை  இஞ்சி, கடும்பகல்   சுக்கு, மாலை கடுக்காய்,மண்டலம் உண்டால்,இழந்த வயதை எளிதாய் பெற்று நலமாய் வாழலாம்’என்பது சித்தர் வாக்கு!

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியம் உண்டோ?

பூக்கும்  தாவரமே!

மக்களைக் காக்கும்  காவலனே!

நீவிர் வாழ்க! வளர்க!  உயர்க!

நன்றி : -தியாகராஜன்(VST).

நெய்வேலி.