காவிரி தென்கரைத் தலங்களுள் ஒன்றான. இடும்பாவனம்

இறைவர் மங்களவல்லி உடனமர் சற்குனநாதர்.

இடும்பன் வழிபட்ட திருத்தலம்

இடும்பனின் ஊர்பக்கத்திலுள்ள குன்றளூர்.

இடும்பனின் சகோதரி இடும்பையை வீமன் மணந்து கொண்டதால் வியாசர் இப்பெயரை சூட்டினார்.

அகத்தியருக்கு திருமண கோலம் காட்டிய தலம். பிரமன் எமன் ராமர் வழிபட்ட தலம். இவ்வாலயம் மூலவருக்கு பின்னால் இறைவன் இறைவியாரின் மணக்கோலம் உள்ளது இவ்வாலயத்தின் மற்றுமொரு சிறப்பு.

இவ்வாலயத்திற்கு மற்றுமொரு சிறப்பாக பிதுர் முக்தி தலம் என்ற பெயரும் உண்டு ஆகவே பித்ருக்களுக்கு வழிபாடுகளை இவ்வாலயத்தில் செய்யலாம். ஞானசம்பந்தருக்கு மணல்கள்  சிவலிங்கமாக தெரிந்ததால் கால்களை தூக்கி தலைகீழாய் கைகளால் நடந்த இடம்.

இவ்வாலயத்தில் விசேஷமான முறையில் கடல் நீரீன் நுரையிலான வெள்ளை விநாயகர் உள்ளார். ஆலயத்திற்கு அருகில் தில்லைவிளாகம் என்ற ராமர் கோயில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற திருத்தலம்