ஆலயதரிசனம்…  தெப்பக்குளம்_மாரியம்மன்..

--

ஆலயதரிசனம்…  தெப்பக்குளம் மாரியம்மன்..

 1. மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் விழா நடக்கும் முன்பு முதல் பூஜை இந்த மாரியம்மனுக்கே செய்யப்படுகிறது.
 2. கோயிலுடன் சேர்ந்துள்ள தெப்பம் மதுரை வட்டாரத்திலேயே மிகப்பெரிய தெப்பம் எனும் பெருமையினை உடையது.
 3. பிற அம்மன் கோயில்களில் இல்லாத விதமாக இங்கு அம்மனின் இடது காலுக்கு கீழே மகிஷாசுரன் இருக்கிறான்.
 4. வண்டியூரில் வசிக்கும் மக்கள் எந்த விசேஷங்கள் நடத்தினாலும், முதலில் அம்மனிடம் உத்தரவு கேட்ட பின்பே நடத்துகிறார்கள்.
 5. மாரியம்மனும், துர்க்கையும் வேறு வேறு வடிவங்களாக இருந்த போதிலும், இருவரும் அம்பிகையின் அம்சமாகவே திகழ்கின்றனர்.
 6. இதனை உணர்த்தும் விதமாக இக்கோயிலில் இருவரும் சேர்ந்த அமைப்பில் காட்சி தருகின்றனர். ஒரே அம்பிகையில், இரு அம்பாள்களை தரிசனம் செய்வது அபூர்வம்.
 7. அன்னை சிரித்த கோலத்தில், கைகளில் பாசம், அங்குசம் ஏந்தி காட்சி தருகிறாள். இடது காலை தொங்க விட்டு, வலது காலை மடக்கி அமர்ந்து அருளாட்சி செய்கிறாள்.
 8. பொதுவாக அம்மனின் காலுக்கு கீழே அசுரன் உருவம் இருக்கும். ஆனால் அன்னை துர்க்கையின் அம்சமாக இருப்பதால் காலுக்கு கீழே மகிஷாசுரன் இருக்கிறான்.
 9. திருமலை நாயக்கர் மன்னர் அக்காலத்தில் மகால் கட்டிய போது கட்டுமான பணிகளுக்கு தேவையான மணல், அம்மன் கோயிலுக்கு வலப்புறம் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது.
 10. மணல் தோண்டியதால் பள்ளமாக இருந்த பகுதியை சீரமைக்க, சதுர வடிவில் வெட்டி, தெப்பக்குளமாக மாற்றி அதன் நடுவே வசந்த மண்டபம் ஒன்றினையும் கட்டினார்.
 11. தெப்பம் தோண்டும் போது கிடைத்த  முக்குறுணி விநாயகர் சிலை மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது.
 12. வைகை கரையில் உள்ள வண்டியூரின் மேல் மடைக்கு நேரே இத்தெப்பம் கலை நயத்துடன் மன்னர் கால கட்டடக் கலைக்கு சான்றாக விளங்குகிறது.
 13. தெப்பத்திருவிழாவின் போது மீனாட்சியம்மன் இங்குள்ள தெப்பத்தின் நடுவே உள்ள வசந்த மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.
 14. இங்கு அம்பாள் பிரதானம் என்பதால், வேறு பரிவார தெய்வங்கள் கிடையாது. அரசமரத்தின் அடியில் விநாயகர் மற்றும் பேச்சியம்மன் மட்டும் இருக்கின்றனர்.
 15. மதுரையை ஆட்சி செய்த மன்னர்கள், போருக்கு செல்லும் முன்பு வீரத்துடன் செயல்படவும், வெற்றி பெறவும் அன்னையே வணங்கியுள்ளனர்.
 16. கூண்பாண்டியன் ஆட்சி புரிந்த போது மதுரையின் கிழக்கே, கோயில் வீற்றிருக்கும் பகுதி மகிழ மரங்கள் நிறைந்த காடாக இருந்தது.
 17. காட்டினை குறும்பர் எனும் இனத்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து பகுதியை அழித்து வந்தனர். நாளுக்கு நாள் குறுப்பர்களின் தொந்தரவு அதிகரிக்கவே, மன்னர் குறும்பரை அடக்கி விரட்டியடித்தார்.
 18. வைகையில் கிடைத்த அம்மனை தெற்கு கரையில் தற்போது கோயில் வீற்றுள்ள பகுதியில் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
 19. அம்மை நோய், தோல் நோய்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்து நோய்கள், தீராத வியாதிகள் தீர இங்கு வேண்டிக் கொள்ளப்படுகிறது.
 20. குழந்தைகளின் நோய்கள் தீர, குழந்தை தத்துக்கொடுத்து வாங்கி, மண்சிலைகள் கொடுத்து, கரும்புத்தொட்டில்கள் கட்டப்படும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
 21. அம்மனுக்கு தீச்சட்டி, பால்குடம் மற்றும் மாவிளக்குகள் எடுத்து, சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.
 22. அம்மனுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, மூலஸ்தானத்தில் பெரிய பாத்திரத்தில் வைக்கிறார்கள், தீர்த்தம் மிகவும் விசேஷமானது.
 23. கண் நோய், அம்மை உள்ளவர்கள் அம்மனை வணங்கி தீர்த்தத்தை பருகினால் நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.
 24. ஒரு நாளில் மட்டும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் இவ்வாறு தீர்த்தம் வாங்கிச் செல்வது சிறப்பம்சம்.
 25. தோல் சம்பந்தப்பட்ட வியாதி உள்ளவர்கள் அம்பிகைக்கு உப்பு நேர்த்திக்கடன் செலுத்தி வேண்டிக் கொள்கிறார்கள்.
 26. அம்பிகை, துர்க்கையின் அம்சம் என்பதால் செவ்வாய்க் கிழமை எலுமிச்சை தீபமேற்றியும் வேண்டிக் கொள்கிறார்கள்.
 27. தைப்பூசத்தன்று தெப்பத் திருவிழாவும், பங்குனி மாதத்தில் பத்து நாள் பிரமோற்சவத்திருநாளும், பூச்சொரிதல் திருவிழா கோயிலின் முக்கிய திருவிழாக்களாக உள்ளது.
 28. மதுரை வாழ் மக்களின் குலம் தழைக்க செய்யும் குலதெய்வமாக அன்னை அருள்புரிகிறாள்.
 29. தல விருட்சம் வேம்ப மற்றும் அரச மரம், தீர்த்தம் தெப்பக்குளம், உற்சவ அம்மனாக நின்ற நிலையிலும் அருள்பாலிக்கிறாள்.
 1. ஆலய முகவரிஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், தெப்பக்குளம், வண்டியூர் – 625 009. மதுரை மாவட்டம்.

நன்றி : நெட்டிசன் அசோக் குமார் முகநூல் பதிவு