மாணவர்களை அரசு பள்ளிக்கு அழைத்து வர மினி பஸ் டிரைவராக மாறிய கர்நாடக பள்ளி ஆசிரியர்

உடுப்பி:

ர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம் அருகே உள்ள கிராமம் ஒன்றில், அரசு பள்ளியில்  படிக்கும்  மாணவர்கள் பஸ் வசதி இல்லா மல் படிப்பை பாதியில் நிறுத்திவிடக்கூடாது, என்பதற்காக அந்த பள்ளியின் ஆசிரியர், பள்ளியின் முன்னாள் மாணவர்களின் நிதி உதவியுடன் மினி பஸ் வாங்கி, அதற்கு டிரைவராகவும் இருந்து பள்ளி மாணவர்களை அழைத்து வந்து படிப்பு சொல்லிக் கொடுத்து வருகிறார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பராலி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராஜாராம். அந்த கிராமத்திற்கு போதிய பஸ் வசதி இல்லாததா லும், இதுகுறித்து அரசுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் பஸ் இயக்கப்படவில்லை.

இதன் காரணமாக பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைய தொடங்கியது. இதையடுத்து  அந்த பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் ராஜாராம் என்பவர், அந்தப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் 2 பேர்  மற்றும் முன்னாள் மாணவர் சங்க  நிதி உதவியுடன், பள்ளிக்கு மினி பேருந்து ஒன்றை வாங்கினார்.

பின்னர் அந்த பஸ்சுக்கு  தானே ஓட்டுநராகவும் இருந்து, அருகிலுள்ள கிராமப்பகுதிகளுக்கு சென்று  பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து வந்து, மாலையில் திருப்பி கொண்டு விடுகிறார்.

இதன் காரணமாக அந்த பள்ளிக்கு மாணவ மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளது. அரசு செய்யாத ஒரு காரியத்தை அரசு பள்ளி ஆசிரியர் செய்திருப்பது  பெரும் வியப்பயும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, பள்ளியின் தலைமை ஆசிரியை குஷ்மா கறுகையில் “ இந்த பள்ளியில் மொத்தம் 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் ஆசிரியர் ராஜா வித்தியாசனமானவர். அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறது. மேலும், பள்ளியில், அறிவியல் கணிதம் பாடங்களையும் நடத்தி வருகிறார். அதே வேளையில்   பஸ் ஓட்டுநராகவும் ராஜாராம் செயல்பட்டு வருகிறார் என பெருமையுடன் தெரிவித்தார்.