தேவர் ஜெயந்தி: திமுக தலைவர் ஸ்டாலின், வைகோ, டிடிவி உள்பட முன்னணியினர் மரியாதை

சென்னை:

சும்பொன் முத்துராமலிங்க தேவரின் 111-வது  ஜெயந்தி விழா மற்றும் 56-வது குருபூஜை  இன்று நடைபெற்று வரும் நிலையில், அவரது உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செய்து வருகின்றனர்.

பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க பிரமுகர்களும்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, டிடிவி தினகரன் உள்பட அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

 

பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, டி.டி.வி.தினகரன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்தினர். அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கத்தமிழ்செல்வன், தினகரன் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள அலங்கரிக்கப்பட்ட தேவர் படத்துக்கு தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார, தங்கமணி, செங்கோட்டையன் உள்பட பல அமைச்சர்கள் மற்றும் அதிமுக முன்னணியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து, நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள அலங்கரிக்கப்பட்ட தேவர் படத்துக்கு தமிழக பாஜக மூத்த நிர்வாகி இல.கணேசன் மற்றும், எஸ்.வி.சேகர் உள்பட   பாஜக கட்சி நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.