கமுதி:
முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா இன்று தமிழகம் முழுவதும்  கொண்டாடப்பட்டது. அவரது நினைவிடத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற்றது.
admk
தேவரின் பக்தர்கள், ஜோதி ஏந்தி வந்து நினைவாலயத்தில் வழிபாடு நடத்தினர். மேலும் பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்து அவரது சிலைக்கு பால் அபிஷேகம் செய்தனர். தேவர்  நினைவாலயம் முன்பாக பெண்கள் பொங்கல் வைத்தும், முடி காணிக்கை செலுத்தியும் வேண்டிக்கொண்டனர்.
இன்று காலை, அதிமுக மற்றும்  தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ், ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், மணி கண்டன், பாஸ்கரன், வீட்டு வசதி வாரிய தலைவர் வைரமுத்து, அன்வர்ராஜா எம்.பி., அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் முனியசாமி உள்பட பலர் பங்கேற்று தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
dmk
தொடர்ந்து மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன்,. பாஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க. சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின்,
காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர்,
ம.தி.மு.க. சார்பில் வைகோ,
mdmk
த.மா.கா சார்பில் ஜி.கே. வாசன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
இதனை முன்னிட்டு பசும்பொன்னில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருந்தது. வெளி மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 6000 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு குருபூஜையையொட்டி பல்வேறு கட்சியினர் இன்று காலை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அமைச்சர்கள் சீனிவாசன், செல்லூர் ராஜு, மணிகண்டன், விஜயபாஸ்கர், உதயகுமார் மரியாதை
முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மரியாதை செலுத்தினார்.