தேவர் மகன்-2: கமல்ஹாசன்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

`இந்தியன் 2’ முடிந்தவுடன் ‘தேவர் மகன் 2’ வேலைகள் தொடங்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன், கமல்ஹாசன் இணைந்து நடித்த தேவர்மகன் கடந்த 1992ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. படத்தில் அவர்களுடன்  நாசர், ரேவதி, கவுதமி, வடிவேலு உள்பட ஏராளமான நடிகர்கள் நடிததிருந்தனர்.

தேசிய விருது பற்ற தேவர் மகன் படம் பின்னர்,   இந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தற்போது தேவர்மகன்-2 படம் உருவாக இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.

தற்போது ஏற்கனவே நடித்த படங்களின் 2வது பாகம் தயாரிப்பது பேஷனாகி வரும் நிலையில்,  கமல்ஹாசன்  நடிப்பில் சமீபத்தில்  `விஸ்வரூபம் 2’ வெளியானது. மேலும், `இந்தியன் 2’ படத்தில் கமல் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தேவர் மகன் 2-ம் பாகம் உருவாக இருப்பதை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர்  கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அவர் அறிவித்த சில நிமிடங்களில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இச்செய்தி இடம்பெற்றது. அவரது ரசிகர்கள் பலரும் அதை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

You may have missed