சபரிமலை மாத பூஜைக்கு பக்தர்கள் வரவேண்டாம் – வேண்டுகோள் விடுக்கும் தேவசம் போர்டு

கொல்லம்: சபரிமலையில் மார்ச் 14 முதல் 18ம் தேதி வரை நடைபெறவுள்ள மாத பூஜைக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாமென தேவசம் போர்டு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை தற்போது இந்தியவில் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக கேரளாவில் இதுவரை 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக, வளைகுடாப் பகுதி உள்ளிட்ட பல நாடுகளுக்கு மலையாளிகள் சென்று வருவது அதிகம் என்பதால், அங்கே நோய் தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சபரிமலையில் மார்ச் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெறும் மாத பூஜைக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என தேவசம் போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்கவே, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.