நாட்டிலேயே மிக நீளமான இரண்டடுக்கு பலத்தின் திறப்பு விழாவிற்கு அழைப்பு இல்லை – முன்னால் பிரதமர் தேவகவுடா வருத்தம்

அசாம் மாநிலத்தில் தன்னால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பாலத்தின் திறப்பு விழாவிற்கு தனக்கு அழைப்பு விடுக்க வில்லை என முன்னாள் பிரதமர் தேவகவுடா வருத்தம் தெரிவித்துள்ளார்.

deve_gowda

சீனாவின் எல்லைப்பகுதியை ஒட்டி அசாம் மற்றும் அருணச்சலப்பிரதேச வழியாக ஓடும் பிரம்மபுத்திரா நதியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியை இணைத்து போகிபீல் என்ற இடத்தில் இரண்டடுக்கு பாலம் கட்டத்து. இந்தியாவிலேயே மிகப்பெரிய பாலமான இது 4.94 கி.மீ. நீளம் கொண்டது. ஆசிய கண்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய பாலமாகவும் இது உள்ளது.

இந்த பாலம் 1997ம் ஆண்டு முன்னால் பிரதமர் தேவகவுடாவால் அடிக்கல் நட்டப்பட்டு அதன்பின்னர் 2002ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டன. 16 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த பாலத்தின் பணிகள் கடந்த டிசம்பர் மாதம் முடிந்தது.

ஆசியாவிலேயே மிக நீளமன பாலமான இந்தில் இதில், மேலே மூன்று வழிச்சாலையும் கீழே இரண்டு வழி ரெயில் தடமும் அமைக்கப்பட்டுள்ளன. 5900 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இப்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

இந்நிலையில், இந்த பாலம் திறப்பு விழாவுக்கு தன்னை அழைக்காதது குறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடா வேதனை தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தேவகவுடாவிடம் பாலத்தின் திறப்பு விழாவிற்கு அழைக்கப்படாதது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தேவகவுடா, “ அட ராமா! என்னை யார் இப்போது நினைவில் வைக்கப்போகிறார்கள். சில நாளிதழ்களாவது இதை சுட்டிக்காட்டி இருக்கலாம். நான் பிரதமாரக இருந்தபோது அடிக்கல் நாட்டிய இந்த பாலத்துக்கு அப்போதே 100 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கி இருந்தேன். இன்று மக்களும் என்னை மறந்து விட்டார்கள் “ வேதனையுடன் கூறினார்.