சிவ சேனாவுக்கு அழைப்பு விடுத்த தேவே கௌடா

பெங்களூரு

ன்று நடைபெற உள்ள குமாரசாமியின் கர்நாடக முதல்வர் பதவி ஏற்பு விழாவுக்கு சிவசேனா தலைவரை தேவே கௌடா அழைத்துள்ளார்.

கர்நாடக முதல்வராக இன்று மஜத கட்சியின் தலைவர் குமாரசாமி பதவி ஏற்க உள்ளார்.   அவர் ஆட்சி அமைக்க காங்கிரஸ் நிபந்தனை அற்ற ஆதரவை அளித்துள்ளது.   இன்று நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,  சோனியா காந்தி உட்பட பலர் கலந்துக் கொள்ள உள்ளனர்.

இந்த விழாவில் கலந்துக் கொள்ள சிவசேனா தலைவர் உதவ் தாக்கரே வுக்கு முன்னாள் பிரதமரும் குமாரசாமியின் தந்தையுமான தேவே கௌடா அழைப்பு விடுத்துள்ளார்.

உதவ் தாக்கரே, “கர்நாடக முதல்வர் பொறுப்பேற்கும் குமாரசாமிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  ஆனால் நான் பால்கர் இடைத் தேர்தல் வேலைகளில் மும்முரமாக உள்ளதால் இந்த நிகழ்வில் கலந்துக் கொள்ள இயலவில்லை”  என தெரிவித்துள்ளார்.