முன்னேற்றமே வன்முறைக்கு பதில் அளிக்கும் : மோடி

பிலாய்

பிரதமர் மோடி வன்முறைக்கு முன்னேற்றமே பதில் அளிக்கும் எனக் கூறி உள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாய் நகரில் இன்று பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.  அதில் ஒன்றாக ஜகல்பூருக்கும் ராய்ப்பூருக்கும் இடையில் விமான சேவையை பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

அத்துடன்  பிலாய் இரும்புத் தொழிற்சாலையின் புதிய பகுதியை மோடி திறந்து வைத்தார்.   பிலாய் இரும்புத் தொழிற்சாலையில் பணியாளர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் காசோலைகள் அளித்தார்.   அதன் பிறகு மக்களுக்கான பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்து மோடி மக்களிடையே உரையாற்றினார்.

மோடி தனது உரையில் ”சத்தீஸ்கரில் அமைதி, சட்டம் ஒழுங்கில் ஸ்திரத்தன்மை ஆகியவை நிகழ்வது முதல்வர் ரமன்சிங் நடத்தும் திறமையான ஆட்சியால் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.   மாநில அரசும் மத்திய அரசும் மக்களுக்கு பல நன்மைகள் செய்து வருகின்றன.  முந்தைய காங்கிரஸ் அரசு செய்யாமல் விட்ட பல நலத் திட்டங்களை தற்போதைய அரசு செய்து வருகிறது.

முந்தைய காங்கிரஸ் அரசு சாலைகளை போடவே தயங்கி வந்தது.   ஆனால் பாஜக அரசு அனைவரையும் விமானத்தில் பறக்க வகை செய்துள்ளது.   இந்த பகுதியில் முதலில் துப்பாக்கிகளும் குண்டுகளுமே நிறைந்திருந்த வன்முறை பூமியாக விளங்கியது.   ஆனால் பாஜக முன்னேற்றத்தின் மூலம் வன்முறைக்கு பதில் அளித்துள்ளது.   வன்முறைக்கு ஒரே பதில் முன்னேற்றம் என்பதில் பாஜக தெளிவாக உள்ளது”  என கூறினார்.